வர்த்தக துளிகள்.. பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்திய பஜாஜ் பைனான்ஸ்

 
வட்டி விகிதம் உயர்வு

வங்கி அல்லாத நிதி சேவை நிறுவனமான பஜாஜ் பைனான்ஸ் நிரந்த வைப்புநிதிகளுக்கான (பிக்சட் டெபாசிட்) வட்டி விகிதத்தை 0.40 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் 44 மாத டெபாசிட்களுக்கு 8.35 சதவீதம் வட்டி வழங்கும். அதேசமயம் மூத்த குடிமக்களுக்கு 8.6 சதவீதம் வட்டி பெறுவார்கள். முதலீட்டாளர்கள் 36 முதல் 60 மாத காலத்தை தேர்வு செய்யும் போது 8.05 சதவீத வட்டி பெறலாம்.

எஃப்.எம்.சி.ஜி. பொருட்கள்

கடந்த மார்ச் காலாண்டில் உணவு பொருட்களுக்கான தேவை அதிகரிப்பு காரணமாக வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்களின் விற்பனை சிறப்பான வளர்ச்சி கண்டுள்ளது. நீல்சன்ஐகியூ அறிக்கையின்படி, கடந்த ஜனவரி-மார்ச் மாத காலத்தில் உணவு பொருட்களுக்கான அதிக தேவை 6 காலாண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்களின் விற்பனை அளவு வளர்ச்சிக்கு வழிவகுத்தது.

பறப்பதற்கு தடை போட்ட லாக்டவுன்… ரூ.600 கோடி நஷ்டத்தை சந்தித்த ஸ்பைஸ்ஜெட்..

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இந்நிலையில், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு விமானம் குத்தகைக்கு வழங்கும் ஏர்காஸ்டிஸ் நிறுவனம், இந்த மாத தொடக்கத்தில் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில், தங்களுக்கு நிலுவை தொகை தராத ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு எதிராக திவால் செயல்முறையை தொடங்கக் கோரி வழக்கு தொடர்ந்தது. இந்த சூழ்நிலையில், ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் திவால்  செயல்முறையில் இறங்க உள்ளதாக ஊக செய்திகள் வெளியானது. ஆனால்  இந்த செய்தி ஒரு வதந்தி என்றும் ஆதாரமற்றது என்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங் தெரிவித்தார்.

ஜியோ சினிமா

ஐ.பி.எல். 2023-ன் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் பார்ட்னரான ஜியோ சினிமா, முதல் ஐந்து வாரங்களில் 1,300 கோடி வீடியோ பார்வைகளை பெற்றுள்ளதால், டிஜிட்டல் ஸ்போர்ட்ஸ் பார்க்கும் உலகில் உலகளாவிய அளவுகோல்களை தொடர்ந்து அமைத்து வருகிறது என்று வியாகாம்18 ஒருஅறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், ஒரு போட்டிக்கு ஒரு பார்வையாளர் செலவழித்த சராசரி நேரம் 60 நிமிடங்களை எட்டியது என்று கூறப்பட்டுள்ளது.