வர்த்தக துளிகள்.. அதானி நிறுவனங்களில் மேலும் முதலீடு செய்வோம்- ராஜீவ் ஜெயின் தகவல்

 
ஜி.கியூ.ஜி. பார்ட்னர்ஸ்

அமெரிக்க முதலீட்டு நிறுவனமான ஜி.கியூ.ஜி. பார்ட்னர்ஸ் கடந்த வாரம் அதானி குழுமத்தின் அதானி போர்ட்ஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி டிரான்ஸ்மிஷன் மற்றும் அதானி என்டர்பிரைசஸ் ஆகிய 4 நிறுவனங்களின் பங்குகளை ரூ.15,446 கோடிக்கு வாங்கியது. இந்நிலையில், அதானி குழும நிறுவனங்களில் தனது முதலீட்டு நிறுவனம் தனது முதலீட்டை மேலம்  அதிகரிக்கும் என்று ஜி.கியூ.ஜி. பார்டனர்ஸின் நிறுவனர் ராஜீவ் ஜெயின் தெரிவித்தார்.

டாடா,ஏர் இந்தியா

டாடா குழுமத்துக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் தனது பணியாளர்களில் 40 சதவீதத்திற்கும் மேலாக பெண்கள் உள்ளனர் என்று தெரிவித்துள்ளது. மேலும் ஏர் இந்தியாவின் 1,825 விமானிகளில் 275 பேர் அதாவது மொத்த விமானிகளில் 15 சதவீதம்  பேர் பெண் விமானிகள். அதிக எண்ணிக்கையிலான பெண் விமானிகளை கொண்ட விமான நிறுவனமான தங்களது நிறுவனம் திகழ்கிறது என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

மின்சாரம்

இந்த கோடை காலம் மற்றும் வரும் ஆண்டுகளில் இரவு நேர மின்வெட்டு அபாயத்தை இந்தியா எதிர்கொள்ள வாய்ப்புள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. புதிய நிலக்கரி மற்றும் நீர்மின் உற்பத்தி திறனை சேர்ப்பதில் ஏற்படும் தாமதங்கள் சூரிய மின்சக்தி கிடைக்காத போது அதிகரித்து வரும் மின்சார தேவையை நிவர்த்தி செய்யும் திறனை குறைக்கலாம் என கூறப்படுகிறது.

பணம்

2017-18 முதல் 2022-23 வரையிலான ஐந்தாண்டு காலத்தில் பல்வேறு பொருட்களுக்கு மீது மத்திய அரசு விதித்த முக்கிய செஸ் மற்றும் கூடுதல் கட்டணம் வாயிலான வசூல் 133 சதவீதம் அதிகரித்துள்ளது. மத்திய நிதியமைச்சகத்தின் புள்ளிவிவரத்தின்படி, மத்திய அரசுக்கு 2017-18ம் நிதியாண்டில் செஸ் மற்றும் கூடுதல் கட்டணம் வாயிலான வருவாய் ரூ.2.18 லட்சம் கோடியாக இருந்தது. இது  2022-23 நிதியாண்டில் ரூ.5.10 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.