வர்த்தக துளிகள்.. இந்தியாவில் கடந்த பிப்ரவரியில் வேலையின்மை விகிதம் அதிகரிப்பு..

 
4 மாதத்தில் வேலையிழந்த 2 கோடி பேர்… வேலையின்மை உண்மையை மறைக்க முடியாது… ராகுல் காந்தி ஆவேசம்

இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் அறிக்கையின்படி, இந்தியாவின் வேலையின்மை விகிதம் கடந்த பிப்ரவரியில் 7.45 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஜனவரியில் வேலையின்மை விகிதம் 7.14 சதவீதமாக இருந்தது. கடந்த பிப்ரவரியில் நகர்புற வேலையின்மை விகிதம் 8.55 சதவீதத்திலிருந்து 7.93 சதவீதமாக குறைந்துள்ளது. அதேசமயம் கிராமப்புற வேலையின்மை விகிதம் 6.48 சதவீதத்திலிருந்து 7.23 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அமேசான்

கொரோனா தொற்றுநோய் காலத்தில் இந்திய நுகர்வோர் ஆன்லைனில் பொருட்களை வாங்கினர். தற்போது சில்லரை சங்கிலித் தொடர் நிறுவனங்கள் மற்றும் மால்களில் கோவிட்டுக்கு முந்தைய காலத்தை விட விற்பனையில் முழுமையான மீட்சி மற்றும் மக்கள் வரத்து அதிகரித்துள்ளபோதிலும், நுகர்வோர் தொடர்ந்து ஆன்லைனில் பொருட்களை வாங்கி வருகின்றனர் என ஆய்வு சந்தை ஆய்வு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

கச்சா எண்ணெய்

முக்கிய 8 துறைகள் என்பது கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சிமெண்ட், நிலக்கரி, மின்சாரம், உருக்கு,  பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள் மற்றும் உரம் ஆகியவையாகும். 2023 ஜனவரியில் முக்கிய 8 துறைகள் உற்பத்தி 7.8 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. 2022 ஜனவரி மாதத்தில் முக்கிய 8 துறைகள் உற்பத்தி 4 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டு இருந்தது. கடந்த ஜனவரியில் கச்சா எண்ணெய்யை தவிர்த்து மற்ற 7 பொருட்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது.

நிதிப் பற்றாக்குறை

நம் நாட்டின் நிதிப் பற்றாக்குறை இந்த நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் (ஏப்ரல்-ஜனவரி)  திருத்தப்பட்ட மத்திய பட்ஜெட்  இலக்கில் 67.8 சதவீதத்தை தொட்டுள்ளது. 2022 ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான 10 மாதங்களில் மத்திய அரசுக்கு மொத்தம் ரூ.19.20 லட்சம் கோடி வருவாய் வந்துள்ளது. அதேசமயம், மத்திய அரசு மொத்தம் ரூ.31.68 லட்சம் கோடிக்கு செலவினங்களை மேற்கொண்டுள்ளது. இதனையடுத்து மத்திய அரசுக்கு அந்த காலாண்டில் ரூ.11.91 லட்சம் கோடி நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.