வர்த்தக துளிகள்.. புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் மந்தம்

 
அனைத்து குடும்பங்களுக்கும் ஸ்மார்ட்போன்கள் இலவசம்…. ஒடிசா முதல்வர் அறிவிப்பு

ஸ்மார்ட்போன்களுக்கான தேவை மந்தமாக உள்ளதால், ஸ்மார்ட்போன் பிராண்டுகள் புதிய மாடல்கள் அறிமுக வேகத்தை குறைத்துள்ளன. 2023ம் ஆண்டின் முதல் இரண்டு (ஜனவரி, பிப்ரவரி) மாதங்களில் சந்தையில் புதிதாக 28 ஸ்மார்ட்போன்கள் மாடல்கள் மட்டுமே அறிமுகமாகி உள்ளது. அதேசமயம் 2022ம் ஆண்டில் முதல் இரண்டு மாதங்களில் 36 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டது என அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட்டி வருவாய் அமோகம்…. லாபமாக ரூ.1,853 கோடி அள்ளிய கோடக் மகிந்திரா வங்கி..
தனியார் வங்கியான கோடக் மகிந்திரா வங்கி, அதானி குழுமத்துக்கு சிறிய அளவில் கடன் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கோடக் மகிந்திரா வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், அதானி குழுமத்துக்கு சிறிய அளவில் கடன் வழங்கியுள்ளோம். நாட்டின் ஒவ்வொரு நிறுவனத்துடனும் நாங்கள் வர்த்தகம் செய்கிறோம்.  எங்களின் கடன் தத்துவம் மற்றும் எங்கள் இருப்புநிலைக் குறிப்பின் அளவிற்கு ஏற்ப எங்களது கடன் வழங்கல் உள்ளன என தெரிவித்தார்.

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நாடு முழுவதும் 5ஜி தொலைத்தொடர்பு சேவையை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 27 நகரங்களில் 5ஜி சேவையை தொடங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது ஜியோவின் 5ஜி சேவை நாடு முழுவதுமாக மொத்தம் 331 நகரங்களில் கிடைக்கும் என ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது.

பணம்

2023-24ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்பும் திட்டத்தின் (எல்.ஆர்.எஸ்.) கீழ் வெளிநாட்டுக்கு பணம் அனுப்புதலுக்கான வரி வசூல் மூலத்தை (டி.சி.எஸ்.) 5 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்த முன்மொழியப்பட்டது. 2023 ஜூலை 1ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது. இதனால் வெளிநாட்டில் படிக்கும் தங்கள் குழந்தைகளுக்கு பணம் அனுப்புவதற்கான செலவினம் பெற்றோர்களுக்கு மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.