வர்த்தக துளிகள்... ரூ.32.50 கோடிக்கு சொகுசு குடியிருப்பை விற்பனை செய்த பாலிவுட் நடிகை

 
சோனம் கபூர் அஹூஜா

பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர் அஹூஜா கடந்த 2015ம் ஆண்டில்  மும்பையின் வணிக மாவட்டமான பாந்த்ரா-குர்லா பகுதியில் ஒரு சொகுசு குடியிருப்பை ரூ.31.48 கோடிக்கு வாங்கி இருந்தார். தற்போது சொகுசு குடியிருப்பை டெல்லியை  சேர்ந்த எஸ்.எம்.எஃப். இன்ஃப்ராஸ்ட்ரக்சர்  நிறுவனத்துக்கு ரூ.32.50 கோடிக்கு விற்பனை செய்துள்ளார். பத்திர பதிவுக்காக  எஸ்.எம்.எஃப். இன்ஃப்ராஸ்ட்ரக்சர்  நிறுவனம் பத்திர பதிவுக்காக ரூ.1.95 கோடி முத்திரை கட்டணம் செலுத்தியுள்ளது.

ஸ்விக்கி

உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி 2022ம் நிதியாண்டுக்கான தனது நிதி நிலை முடிவுகளை மத்திய நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்துள்ளது. அதன்படி, 2022ம் நிதியாண்டில் ஸ்விக்கி நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி கண்ட போதிலும்  நஷ்டம் இரு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் ஸ்விக்கி நிறுவனத்துக்கு ரூ.3,629 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 2021ம் நிதியாண்டில் ஸ்விக்கி நிறுவனத்துக்கு ரூ.1,612 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருந்தது.

சோஸ்யோ

டெல்லில குஜராத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் 100 ஆண்டுகள் பழமையான குளிர்பானங்கள் தயாரிப்பு நிறுவனம் சோஸ்யோ ஹாஜோரி பெவரேஜ்ஸ். குஜராத்தில் சோஸ்யோ, காஷ்மீரா, லீமீ, ஜின்லிம், ரன்னர், ஒப்பனர், ஹஜோரி சோடா போன்ற வலுவான பிராண்டுகளுடன் வலுவான இருப்பை கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளை வாங்க போவதாக ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமானத்தில் பயணிகள்

கடந்த டிசம்பர் மாதத்தில் உள்நாட்டு விமான சேவையை 1.29 கோடி விமான பயணிகள் பயன்படுத்தியுள்ளனர். இது கோவிட் பரவலுக்கு முந்தைய அளவை காட்டிலும் அதிகமாகும். 2019 டிசம்பர் மாதத்தில் இந்திய உள்நாட்டு விமான சேவை நிறுவனங்களின் விமானங்கள் (ஆகாசா ஏர் நிறுவனத்தை தவிர) லோக்கல் வழித்தடங்களில் 1.26 கோடி பயணிகளை சுமந்து சென்று இருந்தது என்று சிவில் விமான போக்குத்வரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.