வர்த்தக துளிகள்... 9ம் தேதியன்று நிதி நிலை முடிவுகளை வெளியிடும் டி.சி.எஸ்.

 
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்.) நிறுவனம் இம்மாதம் 9ம் தேதியன்று தனது கடந்த டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட உள்ளது. 12ம் தேதியன்று இன்போசிஸ் மற்றும் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் ஆகிய தங்களது டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட உள்ளன. விப்ரோ நிறுவனம் வரும் 13ம் தேதியன்று தனது டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை அறிவிக்கிறது.

ஆர்.கே. கிருஷ்ணகுமார்

ரத்தன் டாடாவின் நம்பிக்கைக்குரியவரும், டாடா குழுமத்தின் மூத்த தலைவரும், டாடா சன்ஸின் முன்னாள் இயக்குனருமான ஆர்.கே. கிருஷ்ணகுமார் தனது 84வது வயதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி அளவில் காலமானார். அவரது இறுதி சடங்கு இன்று (ஜனவரி 3) மாலை 4.30 மணிககு சந்தன்வாடி மயானத்தில் நடைபெறும் என்று டாடா குழும அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரியாணி

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, கடந்த சனிக்கிழமையன்று நாடு முழுவதுமாக மொத்தம் 3.50 லட்சம் பிரியாணி ஆர்டர்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 2.5 லட்சம் பீட்சாக்கள் ஆர்டர்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. 1.76 லட்சம் சிப்ஸ் பாக்கெட்டுக்கள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்பட்டது என்று உணவு டெலிவரி செயலியான (ஆப்) ஸ்விக்கி  நிறுவனம் தெரிவித்துள்ளது.

வீடு

கடந்த ஆண்டு இறுதி நிலவரப்படி, டெல்லி என்.சி.ஆர். பகுதியில் மொத்தம் 98,920 வீடுகள் விற்பனை ஆகாமல் உள்ளது. இந்த வீடுகளை தற்போதைய விற்பனை வேகத்தில் விற்க பில்டர்களுக்கு 5 ஆண்டுகள் ஆகும். சென்னை  உள்ளிட்ட நாட்டின் முக்கிய 8 நகரங்களில் விற்பனை ஆகாமல் கையிருப்பாக இருக்கும் வீடுகள் 17 சதவீதம் அதிகரித்து 8.49 லட்சம் வீடுகளாக உள்ளது என்று முன்னணி வீட்டு தரகு நிறுவனம்  ஒன்று தெரிவித்துள்ளது.