வர்த்தக துளிகள்.. விலை உயர்வை கட்டுப்படுத்த 20 லட்சம் டன் கோதுமையை வெளிச்சந்தையில் விற்க தயாராகும் மத்திய அரசு..

 
கோதுமை

உள்நாட்டில் அதிகரித்து வரும் கோதுமை விலை உயர்வை கட்டுப்படுத்த, இந்திய உணவு கழகத்தின் கையிருப்பில் இருந்து சுமார் 20 லட்சம் டன் கோதுமையை மத்திய அரசாங்கம் வெளிச்சந்தையில் விரைவில் விற்பனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளிச்சந்தையில் கோதுமையை விற்பனை செய்வது தொடர்பாக ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்குள் மத்திய அரசாங்கம் முடிவு எடுக்கும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

4 மாதத்தில் வேலையிழந்த 2 கோடி பேர்… வேலையின்மை உண்மையை மறைக்க முடியாது… ராகுல் காந்தி ஆவேசம்

மந்தநிலை ஏற்படும் என்ற அச்சம் காரணமாக கடந்த சில வாரங்களாக உலக அளவில் ஐ.டி. நிறுவனங்கள் பணி நீக்கம் அறிவிப்புகளை அறிவித்து வருகின்றன. அமெரிக்காவில் மட்டும் இந்திய ஐ.டி. பணியாளர்கள் சுமார் 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. இவர்களில் பெரும்பாலானவர்கள் எச்-1பி மற்றும் எல்1 விசா வைத்திருப்பவர்கள். இவர்கள் அடுத்த 60 நாட்களுக்குள் வேறு வேலை தேட வேண்டும் அல்லது நாடு திரும்ப வேண்டும் என கூறப்படுகிறது.

5ஜி

நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நேற்று ஒரே நாளில் நாடு முழுவதுமாக மொத்தம் 50 நகரங்களில் 5ஜி சேவையை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நம் நாட்டில் மொத்தம் 184 நகரங்களில் ஜியோ வாடிக்கையாளர்கள் 5ஜி சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் 5ஜி சேவையை ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹோண்டா

ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்ட் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அட்சுஷி ஒகடா பேட்டி ஒன்றில், மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களின் விற்பனை மீட்புப் பாதையில் உள்ளது, மேலும் வரும் நிதியாண்டில் விற்பனை வளர்ச்சி வேகமெடுக்கும். நிறுவனம் 2024 மார்ச் மாதத்தில்  இந்திய சந்தைக்கு ஏற்ற தனது முதல் இரு சக்கர மின்சார வாகனத்தை அறிமுகம் செய்யும் என தெரிவித்தார்.