பங்குச் சந்தைகளில் தொடர் சரிவு... சென்செக்ஸ் 237 புள்ளிகள் வீழ்ச்சி...

 
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

தொடர்ந்து 2வது நாளாக இன்றும் பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டது. சென்செக்ஸ் 237 புள்ளிகள் குறைந்தது.

சர்வதேச அளவில் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு, இந்துஸ்தான் யூனிலீவர் உள்ளிட்ட சில நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் எதிர்பார்ப்பை காட்டிலும் குறைவாக இருந்தது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் மந்தமாக இருந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பவர் கிரிட் மற்றும் எச்.டி.எப்.சி. வங்கி உள்பட மொத்தம் 10 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் உள்பட மொத்தம் 20 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

அரசு நிறுவனம்தான்….வருவாய் அதிகரித்தும் லாபம் குறைந்து போச்சு… பவர் கிரிட் லாபம் ரூ.2,048.42 கோடி

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1562 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,912 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 165 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.280.26 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.57 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 236.66 புள்ளிகள் குறைந்து 60,621.77 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 80.20 புள்ளிகள்  சரிவு கண்டு 18,027.65 புள்ளிகளில் முடிவுற்றது.