வர்த்தக துளிகள்.. ஆஸ்திரேலிய நிலக்கரி துறைமுகம் வாயிலாக 40 கோடி டாலர் கடன் வாங்க அதானி குழுமம் யோசனை

 
அதானி

ஆஸ்திரேலியாவில் உள்ள நார்த் குயின்ஸ்லாந்து ஏற்றுமதி முனையம் அதானி குடும்பத்தின் அறக்கட்டளையின் கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது நிறுவனங்களுக்கு தேவையான நிதியை திரட்ட இந்த ஏற்றுமதி முனைய சொத்துக்களுக்கு எதிராக 40 கோடி டாலர் வரை கடன் திரட்ட உலகளாவிய கடன் நிதியங்களுடன் அதானி குழுமம் பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

5ஜி

பார்தி ஏர்டெல் தற்போது நாடு முழுவதும் 5ஜி சேவை அமல்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், நிறுவனத்தின் 5ஜி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியுள்ளதாக பார்தி ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த நவம்பரில்தான் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி இணைப்புகளின்  எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது.

பண்ணை பசுமை கடைகளில்  இன்று முதல் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.45க்கு விற்பனை!

மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு வெங்காயம் ஏற்றுமதியை கட்டுப்படுத்தவோ அல்லது தடை செய்யவோ இல்லை. வெங்காய விதை ஏற்றுமதிக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 2022 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 52.38 கோடி டாலர் மதிப்புக்கு வெங்காயம் ஏற்றுமதியாகி உள்ளது. குறிப்பாக கடந்த டிசம்பரில் வெங்காய ஏற்றுமதி 50 சதவீதம் அதிகரித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

உரம் போடும் விவசாயி

மத்திய உர அமைச்சகத்தின் அறிக்கையின்படி, கடந்த ஜனவரி மாதத்தில் நாட்டின் உர இறக்குமதி 3.9 சதவீதம் அதிகரித்து 19.04 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. மொத்த உர இறக்குமதியில் யூரியாவின் பங்கு மட்டும் 10.65 லட்சம் டன்னாக உள்ளது. மேலும் டி.ஏ.பி. (5.62 லட்சம் டன்), எம்.ஓ.பி. (1.14 லட்சம் டன்) மற்றும் காம்ப்ளக்ஸ் (1.62 லட்சம் டன்) ஆகியவையும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.  2022 ஜனவரி மாதத்தில் நம் நாடு 18.33 லட்சம் டன் உரம் இறக்குமதி செய்து இருந்தது.