வர்த்தக துளிகள்.. பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்திய யெஸ் வங்கி..

 
ஒரு உண்மை சொல்லட்டுமா சார்….. போட்டி போட்டு வாங்கிய யெஸ் பேங்க் பங்கு…… 18 மாதத்தில் முதலீட்டாளர்களை ஏழையாக்கிய கதை…..

யெஸ் வங்கி குறிப்பிட்ட முதிர்வு கால நிரந்தர வைப்புநிதிகளுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் முதல் 0.50 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. புதிய வட்டி விகிதங்கள் ரூ.2 கோடிக்கும் குறைவான பிக்சட் டெபாசிட்களுக்கு பொருந்தும். புதிய வட்டி விகிதங்கள் பிப்ரவரி 21ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன என்று யெஸ் வங்கியின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச பட்ஜெட் தாக்கல்

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு நேற்று அம்மாநில சட்டப்பேரவையில் 2023-24ம் நிதியாண்டுக்கான அம்மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்தது. உத்தர பிரதேச பட்ஜெட்டில், சுவாமி விவேகானந்தர் இளைஞர் அதிகாரமளிக்கும் திட்டத்தின் கீழ் தகுதியான மாணவர்களுக்கு டேப்லெட்கள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் வழங்குவதற்காக ரூ.3,600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பார்ச்சூன் 500 நிறுவனங்கள் பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

பாரமவுண்ட் குளோபல் மற்றும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவற்றின் கூட்டு நிறுவனமான Viacom18 Media Pvt.கடந்த ஆண்டு ஐ.பி.எல். ஸ்ட்ரீமிங் உரிமையை 270 கோடி டாலருக்கு பெற்றது. இந்நிறுவனம் ஐ.பி.எல். போட்டிகளை இலவசமாக ஸ்ட்ரீம் செய்யும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தியாவின் வளர்ந்து வரும் ஊடக சந்தையில், வாலட் டிஸ்னி கோ மற்றும் அமேசான்  ஆகியவற்றுக்கு சவால் விடும் வகையில் ஐ.பி.எல். போட்டியின் பிரத்யேக உரிமைகளை அந்நிறுவனம் பயன்படுத்துகிறது என கூறப்படுகிறது.

செபி

இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி, அதானி குழும நிறுவனங்களின் லோக்கல் கடன் மற்றும்  பத்திரங்களின் அனைத்து தரவரிசை விவரங்களையும் அளிக்கும்படி கிரெடிட் ரேட்டிங் நிறுவனங்களிடம் தெரிவித்துள்ளது. அதானி குழுமத்தை  சேர்ந்த 10 நிறுவன பங்குகளின் விலையும் நேற்று குறைந்தது. இதனால் அதானி குழும நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு நேற்று மட்டும் ரூ.51,294 கோடி குறைந்தது.