வர்த்தக துளிகள்.. உற்பத்தியை இரு மடங்கு அதிகரிக்க ரூ.45 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் மாருதி சுசுகி இந்தியா

 
மாருதி சுசுகி ஆலை

நாட்டின் மிகப் பெரிய கார் தயாரிப்பாளரான மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் தசாப்தத்தின் முடிவில் ஆண்டுக்கு 40 லட்சம் வாகனங்களாக உற்பத்தி திறனை இரட்டிப்பாக்க சுமார் ரூ.45 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளது. இந்நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி. பார்கவா கூறுகையில், 2031ம் ஆண்டுக்குள் உற்பத்தி திறனை இரண்டு மடங்கு அதிகரிக்க தனது ரொக்க கையிருப்பை பயன்படுத்தி கொள்ளும் என்று தெரிவித்தார்.

இக்ரா நிகர லாபம் ரூ.17 கோடியாக குறைந்தது..

தர நிர்ணய நிறுவனமான இக்ரா ரேட்டிங்ஸ் மதிப்பீட்டின்படி, நடப்பு 2023-24ம் நிதியாண்டில் இந்தியா ஐ.டி. துறையின் வருவாய் வளர்ச்சி 3 சதவீதமாக குறையும். வங்கி, பைனான்சியல் சர்வீசஸ், இன்சூரன்ஸ், ரீடெயில் உள்ளிட்ட முக்கிய துறைகள் தங்களது ஐ.டி. செலவினத்தை குறைத்தது உள்ளிட்டவையே இதற்கு காரணம். கடந்த 2022-23ம் நிதியாண்டில் இந்தியா ஐ.டி. துறையின் வருவாய் 9.2 சதவீதம் வளர்ச்சி கண்டு இருந்தது.

கஜோல்

பிரபல பாலிவுட் நடிகை கஜோல், மும்பையின் அந்தேரி புறநகரில் உள்ள ஒஷிவாரா பகுதியில் வணிகத் திட்டத்தில் சுமார் 2,100 சதுர அடியில் அலுவலக இடத்தை ரூ.7.64 கோடிக்கு வாங்கியுள்ளார். ரியல் எஸ்டேட் டெவலப்பர் வீர் சாவர்க்கர் புராஜெக்ட் நிறுவனத்திடம்இருந்து இந்த இடத்தை வாங்கியுள்ளார். பத்திர பதிவுக்காக மட்டும் ரூ.45.84 லட்சம் முத்திரை கட்டணம் செலுத்தியுள்ளதாக தகவல்.

அரிசி

சிங்கப்பூருக்கு அரிசி ஏற்றுமதியை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி செய்தியாளர்களிடம் கூறுகையில், சிங்கப்பூருடான சிறப்பு உறவை கருத்தில் கொண்டு, அந்நாட்டின் உணவுப் பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அரசி ஏற்றுமதியை அனுமதிக்க இந்தியா முடிவு செய்துள்ளது என்று தெரிவித்தார்.