வர்த்தக துளிகள்.. மாற்று எரிபொருளில் இயங்கும் வாகனங்களுக்கு 28 சதவீதத்துக்கு பதில் 5 சதவீதம் ஜி.எஸ்.டி.

 
சரக்குகள் மற்றும் சேவைகள் வரி

பெட்ரோலுடன் எத்தனாலை கலந்து வாகனங்களுக்கான எரிபொருளாக பயன்படுத்துவதை துரிதப்படுத்த, மின்சார வாகனங்களுக்கு விதிப்பது போல் மாற்று எரிபொருளில் இயங்கும் வாகனங்களுக்கு 5 சதவீதம் மட்டுமே ஜி.எஸ்.டி. விதிக்க வேண்டும் என்று  மத்திய அரசுக்கு இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது மாற்று எரிபொருள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது.

வர்த்தக பற்றாக்குறை

இந்த நிதியாண்டில் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவீதமாக அல்லது 1,000 கோடி டாலராக குறையும். கணக்கீடு காலத்தில் வர்த்தக பற்றாக்குறை குறைந்துள்ளதால் நடப்பு கணக்கு பற்றாக்குறையும்  என்று தர நிர்ணய நிறுவனமான இந்தியா ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது. சென்ற நிதியாண்டின் இதே காலாண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.1 சதவீதமாக இருந்தது.

ஜி.எஸ்.டி. உள்ளிட்ட சீர்த்திருத்தங்கள் வளர்ச்சியை அதிக வளர்ச்சியாக மாற்ற தவறிவிட்டன…. மூடிஸ் கருத்தால் மோடி அரசுக்கு தலைவலி

இந்தியாவின் மக்கள் தொகை அதிகரிப்பு, தொழிலாளர் கிடைப்பை அதிகரிக்கலாம் ஆனால் அது மட்டுமே பொருளாதாரத்தை வலுவாக்க போதுமானதாக இருக்காது. மக்கள்தொகை பலனை பயன்படுத்த கல்வி மற்றும் உள்கட்டமைப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று மூடிஸ் இன்வெஸ்டர் சர்வீஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பார்ச்சூன் 500 நிறுவனங்கள் பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 46வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் முகேஷ் அம்பானி பேசுகையில், மேலும் ஐந்தாண்டுகளுக்கு தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக எனது கடமைகளையும் பொறுப்புகளையும் அதிக வீரியத்துடன் நிறைவேற்றுவேன். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அனைத்து வர்த்தக பிரிவுகளிலும் 2.6 லமட் வேலைகளை உருவாக்கியுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களின் எண்ணிக்கை 3.9 லட்சமாக உள்ளது. நாங்கள் உருவாக்கிய மறைமுக வாழ்வாதார வாய்ப்புகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம் என்று தெரிவித்தார்.