வர்த்தக துளிகள்.. லாக்கர் வாடிக்கையாளர்களுக்கான ஒப்பந்தங்களை புதுப்பித்துக் கொள்ள வங்கிகளுக்கு காலக்கெடு நீட்டிப்பு

 
வங்கி லாக்கர்

நாட்டில் உள்ள வங்கிகள் ஏற்கனவே உள்ள அதன் லாக்கர்  வாடிக்கையாளர்களுடன் தங்கள் லாக்கர் ஒப்பந்தங்களை 2023 ஜனவரி 1ம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி காலக்கெடு நிர்ணயம் செய்து இருந்தது. ஆனால் திருத்தப்பட்ட ஒப்பந்தத்தில் இன்னும் பல லாக்கர் வாடிக்கையாளர்கள் கையெழுத்திடவில்ல என்பதும், முன்னதாக வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அவ்வாறு செய்ய வேண்டியதன் அவசியத்தை இன்னும் தெரிவிக்கவில்லை என்பதும் இந்திய ரிசர்வ் வங்கியின் கவனத்துக்கு வந்தது. இதனையடுத்து தற்போதுள்ள வங்கி லாக்கர் வாடிக்கையாளர்களுக்கான ஒப்பந்தங்களை புதுப்பிப்பதற்கான செயல்முறையை படிப்படியாக முடிக்க வங்கிகளுக்கான காலக்கெடுவை 2023 டிசம்பர் 31ம் தேதி வரை இந்திய ரிசர்வ் வங்கி நீடித்துள்ளது.

சோமாட்டோ பணியாளர்

உணவு டெலிவரி நிறுவனமான சோமாட்டோ தனது 10 நிமிட உணவு விநியோக சேவையான சோமாட்டோ இன்ஸ்ட்ன்ட்  வர்த்தகத்தை தொடங்கிய ஒரு வருடத்துக்குள் மூடுகிறது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த வர்த்தகம் லாபகரமாக மாறுமா என்பது தெரியவில்லை மற்றும் நிலையான செலவுகளை கூட செலுத்துவதற்கு தேவையான தினசரி வருமானத்தை கூட சோமாட்டோ பெறவில்லை என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. சோமாட்டோ நிறுவனம் அண்மையில் தனது உணவக கூட்டாளிகளிடம் இந்த வர்த்தகத்தை நிறுத்துவதாக கூறியதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மீண்டும் ஒரே மாதத்தில் 1 லட்சம் கார்களை விற்பனை விற்பனை செய்த மாருதி சுசுகி இந்தியா..

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் நேற்று 11,177 கிராண்ட் விட்டாரா வாகனங்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. அந்த வாகனங்களில் பின் இருக்கையில் பெல்ட் பொருத்துவதற்கான அடைப்புகளில் ஏற்படக்கூடிய குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்காக அந்த வாகனங்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. கடந்த வாரம் மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் 2022 டிசம்பர் 8 முதல் 2023 ஜனவரி 12 வரை தயாரிக்கப்பட்ட 17,362 வாகனங்கள் (அல்டோ கே10, எஸ்-பிரஸ்ஸோ, பலேனோ, எக்கோ, பிரெஸ்ஸா மற்றும் கிராண்ட் விட்டாரா) திரும்ப பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஸ்பாட்டிஃபை

உலகின் முன்னணி மியூசிக் ஸ்ட்ரீமிங் நிறுவனமான ஸ்பாட்டிஃபை டெக்னாலஜிஸ் நிறுவனம் உலக அளவில் தனது பணியாளர்களில் 6 சதவீத பேரை பணநீக்கம் செய்துள்ளது. அதாவது சுமார் 600 பணியாளர்களை ஸ்பாட்டிஃபை நிறுவனம் பணியிலிருந்து நீக்கியுள்ளது. ஸ்பாட்டிஃபை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டேனியல் ஏக் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருவாய் வளர்ச்சிக்கு முன்னதாக முதலீடு செய்வதில் மிகவும் லட்சியமாக இருக்கிறோம். இந்த காரணத்திற்காக இன்று நாங்கள் நிறுவனம் முழுவதும் எங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை சுமார் 6 சதவீதம் குறைக்கிறோம். எங்களை இங்கு கொண்டு வந்த நகர்வுகளுக்கு நான் முழுப் பொறுப்பு ஏற்கிறேன் என தெரிவித்துள்ளார்.