வர்த்தக துளிகள்... நம் நாட்டில் 15.16 கோடி ஸ்மார்ட்போன் விற்பனை

 
அனைத்து குடும்பங்களுக்கும் ஸ்மார்ட்போன்கள் இலவசம்…. ஒடிசா முதல்வர் அறிவிப்பு

கேனலிஸ் அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 2022ம் ஆண்டில் மொத்தம் 15.16 கோடி ஸ்மார்ட்போன் விற்பனையாகி உள்ளது. 2021ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது ஸ்மார்ட்போன் விற்பனை 6 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டிலும் நம் நாட்டில் ஸ்மார்ட்போன் விற்பனையில் (ஒராண்டு) ஜியோமி நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த டிசம்பர் காலாண்டில் சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட்போன் விற்பனையில் முதலிடத்தை  பிடித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைர தொழிலாளர்கள்

வைர ஏற்றுமதி குறைந்ததையடுத்து, சூரத்தில் உள்ள வைர ஆலைகள் உற்பத்தி குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. சிறிய ஆலைகள் மூடப்பட்டன. இதனால் சூரத்தில் கடந்த சில மாதங்களில் சுமார் 10 ஆயிரம் வைர தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாக தகவல். மேலும் பல தொழிலாளர்களின் சம்பளம் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்வதன் மூலம் உற்பத்தி குறைப்பு பூர்த்தி செய்யப்படவில்லை அதற்கு பதிலாக வேலை நேரம் குறைப்பு மற்றும் ஒரு வார விடுமுறைக்கு பதிலாக இரண்டு வார விடுமுறைகள நிறுவனங்கள் வழங்குகின்றன முன்னணி நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கரும்பு

கடந்த 2021-22 கரும்பு பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்) நம் நாடு 5,000 லட்சம் டன்னுக்கும் அதிகமான கரும்புகள் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. மொத்த கரும்பு உற்பத்தியில் சுமார் 3,574 லட்சம் டன் கரும்புகள் சர்க்கரை ஆலைகளால் பிழியப்பட்டு 394 லட்சம் டன் சர்க்கரை (சுக்ரோஸ்) உற்பத்தி செய்யப்பட்டது. இதில் 36 லட்சம் டன் எத்தனால் உறப்த்தி மாத்திக்கப்பட்டது. 359 லட்சம் டன் சர்க்கரை சர்க்கரை ஆலைகளால் உற்பத்தி செய்யப்பட்டது என்று உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணம்

பொதுத்துறை வங்கிகளின் நிதி ஆரோக்கியம் கணிசமாக மேம்பட்டு, ஒட்டு மொத்த அளவில் ரூ.1 லட்சம் கோடி லாபம் ஈட்டுவதற்கான பாதையில் உள்ளதால், எதிர்வரும் 2023-24ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், பொதுத்துறை வங்கிகளுக்கான மூலதன நிதி வழங்கலை மத்திய அரசாங்கம் அறிவிக்க வாய்ப்பு இல்லை என்று வட்டாரங்கள் தெரிவித்தன. பொதுத்துறை வங்கிகளிடம் மூலதன இருப்பு விகிதம் ஒழுங்குமுறை தேவையை விட அதிகமாக உள்ளதாக தகவல்.