வர்த்தக துளிகள்.. ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது பணவீக்க மேலாண்மையின ஒரு பகுதி.. நிர்மலா சீதாராமன்

 
வாங்குன கடனுக்கு வட்டி மட்டும் ஒரு மாதம் தள்ளுபடி! அசல மறக்காம குடுத்துடுங்க- நிர்மலா சீதாராமன் 

நாட்டின் பணவீக்க மேலாண்மையின் ஒரு பகுதியாக, ரஷ்யா மீதான பொருளாதார தடைகளுக்கு மத்தியில் அந்நாட்டிலிருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா அதிகரித்துள்ளது. உலகளாவிய விலைவாசிகள் யாராலும் கட்டுப்படியாகாத  நிலையில், ஒரு வலுவான அரசியல் முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலையில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் பெறுவதற்கு முடிவு எடுத்த பிரதமரின் தைரியத்தை பாராட்டுகிறேன் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

விமானம்

இந்திய விமான போக்குவரத்து துறை (விமான சேவை வழங்கும் நிறுவனங்கள்) இந்த நிதியாண்டில் (2022-23) ரூ.15 ஆயிரம் கோடி முதல் ரூ.17 ஆயிரம்  கோடி வரை நிகர நஷ்டத்தை சந்திக்கும் என்று தரநிர்ணய நிறுவனமான இக்ரா கணித்துள்ளது. விமான எரிபொருள் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு சரிவு போன்றவையே இதற்கு காரணமாக இருக்கும் என இக்ரா தெரிவித்துள்ளது.

கச்சா எண்ணெய்

சர்வதேச தேவை குறித்த கவலை மற்றும் டாலர் மதிப்பு அதிகரிப்பு போன்ற காரணங்களால் கடந்த ஜனவரி முதல் இதுவரை இல்லாத அளவுக்கு  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் (WTI Bencmark)  ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 85 டாலருக்கும்  கீழ் சென்றது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவது இந்தியாவுக்கு சாதகமான விஷயமாகும்.

அரிசி

வங்கதேசம் அரிசி இறக்குமதியை அதிகரிக்கும் நோக்கில் அதன் மீதான வரியை 25 சதவீதத்திலிருந்து 15.25 சதவீதமாக  குறைத்ததையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை முதல் நம் நாட்டில் அரிசி விலை சுமார் 5 சதவீதம் உயர்ந்தது.  இந்நிலையில், பொது விநியோகஅமைப்பு மற்றும் பிரதமர் மந்திரி கரிப் கல்யாண் அன்ன திட்டத்துக்கு போதுமான அரிசி இருப்பை உறுதி செய்யும் நோக்கில், மத்திய அரசு அரிசி ஏற்றுமதிக்கு 20 சதவீதம் வரி விதித்துள்ளது.