வர்த்தக துளிகள்... ஓய்வு பெறும் வயது உயர்த்தப்படுகிறதா?

 
ஓய்வு பெறும் வயது உயருகிறதா?

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இ.பி.எப்.ஓ.) ஒரு அரசியலமைப்பு சாராத அமைப்பாகும். இது தொழிலாளர்களை ஓய்வூகாலத்துக்காக சேமிக்க ஊக்குவிக்குகிறது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு  தனது விஷன் 2047 ஆவணத்தில், நாட்டில் ஓய்வூ பெறும் வயதை கணிசமாக உயர்த்தப்பட வேண்டும் மற்றும் ஆயுட்காலம் சீரமைக்கப்பட வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளது. இது நாட்டின் ஓய்வூதிய முறை சாத்தியமானதாக இருப்பதையும், போதுமான ஓய்வூதிய பலன்களை வழங்குவதையும் உறுதி செய்வதாகும். ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது மற்ற நாடுகளின் அனுபவத்திற்கு ஏற்ப பரிசீலிக்கப்படலாம் மற்றும் ஓய்வூதிய முறைகளின் நம்பகத்தன்மைக்கு முக்கியமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகவ் சதா

ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. ராகவ் சதா டிவிட்டரில், ஆம் இந்தியா இப்போது உலகில் 5வது பெரிய பொருளாதாரம் மற்றும் இங்கிலாந்தை முந்தியது, ஆனால் எண்களை புரிந்து கொள்வோம். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.5 லட்சம் கோடி டாலர் 140 கோடி மக்களுக்கு உணவளிக்க வேண்டும், அதேநேரத்தில் இங்கிலாந்தின் 3.2 லட்சம் கோடி டாலர் 6.8 கோடி மக்களுக்கு உணவளிக்க வேண்டும். இந்தியாவின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2,500 டாலராக உள்ளது அதேவேளையில் இங்கிலாந்தின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 47 ஆயிரம் டாலராக உள்ளது. இது இந்தியாவை காட்டிலும் 20 மடங்கு அதிகமாகும் என பதிவு செய்துள்ளார்.

இனிப்புகள்

கடந்த மாதம் ரக்ஷாபந்தன் பண்டிகையின் போது, இனிப்புகள் மற்றும் திண்பண்டங்களின் விற்பனை அபரிமிதமான வளர்ச்சியை கண்டது. விநாயகர் சதுர்த்தி திருவிழாவில் மோதக் மற்றும் பிற இனிப்புகளின் தேவை அதிகரித்தது. இந்த போக்கு எதிர்வரும் தசரா, தீபாவளி மற்றும்  ஹாலி பண்டிகை காலங்களிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் இந்த நிதியாண்டில் இனிப்புகள் மற்றும் திண்பண்டங்கள் விற்பனை இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1.25 லட்சம் கோடியை எட்டும் என்று இனிப்புகள் மற்றும் திண்பண்டங்கள் உற்பத்தியாளர்களின் கூட்டமைப்பு இயக்குனர் பிரோஸ் எச் நக்வி தெரிவித்தார்.

ஆர்.பி.எல். பேங்க்

தனியார் வங்கியான ஆர்.பி.எல். பேங்க் தனது சேமிப்பு கணக்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. ஆர்.பி.எல். பேங்க் தினசரி இருப்பு வரம்பில், வட்டி விகிதங்களை 0.25 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. புதிய வட்டி விகிதங்கள் 2022 செப்டம்பர் 5 (நேற்று) முதல் அமலுக்கு வருவதாக ஆர்.பி.எல். பேங்கின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.