வர்த்தக துளிகள்... ஒரு நாளைக்கு ரூ.1,612 கோடி சம்பாதிக்கும் கவுதம் அதானி

 
கவுதம் அதானியின் அதானி கேஸ் லாபம் ரூ.121 கோடி… 3 மாசத்துல லாபம் 60 சதவீதம் கிடுகிடு உயர்வு…

அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி இதுவரை இல்லாத வேகத்தில் சம்பாதித்து வருகிறார். ஐ.ஐ.எப்.எல். வெல்த் ஹூரன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில் 2022ன் படி, கவுதம் அதானி ஒரு நாளைக்கு முன்னோடியல்லாத வகையில் ரூ.1,612 கோடி அளவுக்கு செல்வத்தை உருவாக்கி, அமேசான் நிறுவனர் ஜெப் பிசோஸை பின்னுக்கு தள்ளி உலகின் இரண்டாவது பணக்காரராக உள்ளார்.

போக்ஸ்வேகன் கார்

போக்ஸ்வேகன் பாசஞ்சர் கார்ஸ் இந்தியா நிறுவனம் தனது அனைத்து மாடல் கார்களின் விலையை 2 சதவீதம் வரை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மூலதன செலவினம் அதிகரிப்பால் விலையை உயர்த்துவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் விர்டஸ், டைகன்  உள்ளிட்ட மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

விப்ரோ

விப்ரோ நிறுவனம் தனது நிறுவனத்தில் ஊதியம் பெற்று கொண்டு போட்டி நிறுவனத்துக்கு பணிபுரிந்த 300 ஊழியர்களை கண்டு பிடித்து வேலையிலிருந்து நீக்கியுள்ளது.  இது மிகவும் எளிமையானது, இது நேர்மையை மீறும் செயல். அந்த நபர்களின் சேவைகளை நாங்கள் நிறுத்தியுள்ளோம் என்று விப்ரோ நிறுவனத்தின் செயல்தலைவர் ரிஷாத் பிரேம்ஜி தெரிவித்தார்.

கோடீஸ்வரர்கள்

2026ம் ஆண்டுக்குள் இந்தியாவில் அமெரிக்க டாலர் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கிரெடிட் சூயிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2021ம் ஆண்டில் இந்தியாவில் 7.96 லட்சம் கோடீஸ்வரர்கள் இருந்தனர். இது 2026ம் ஆண்டுக்குள் 105 சதவீதம் அதிகரித்து 16.32 லட்சமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.