வர்த்தக துளிகள்.. 80 விமானிகளை ஊதியம் இன்றி விடுப்பில் செல்லுமாறு கேட்டுக்கொண்ட ஸ்பைஸ்ஜெட்

 
ஸ்பைஸ் ஜெட்

குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட்  நிறுவனம், நிறுவனத்தில் தேவைக்கும் அதிகமாக விமானிகள் (பைலட்) இருப்பதை கண்டறிந்தது. இதனையடுத்து 80 விமானிகளை ஊதியம் இன்றி விடுப்பில் செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல். 3 மாதங்களுக்கு சம்பளம் இன்றி விடுப்பில் செல்லும்படி அவர்களிடம் (விமானிகள்) ஸ்பைஸ்ஜெட் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஹீரோ மோட்டோகார்ப்

நாட்டின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து நாடு முழுவதும் இரு சக்கர மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் உள்கட்டமைப்பை  அமைக்க உள்ளதாகவும், இதன் மூலம் மின்மயமாக்கப்பட்ட எதிர்காலத்தை நோக்கி வெகுஜன இயக்கத்தின் மாற்றத்தை ஊக்குவிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

அனைத்து குடும்பங்களுக்கும் ஸ்மார்ட்போன்கள் இலவசம்…. ஒடிசா முதல்வர் அறிவிப்பு

நம் நாட்டில் ஸ்மார்ட்போன்கள் விற்பனை முதல் முறையாக எதிர்வரும் பண்டிகை காலத்தில் சென்ற ஆண்டைக் காட்டிலும் 9 சதவீதம் குறையும். தேவை குறைவாக இருக்கும் என்பதால் விற்பனை பெரிய சவாலாக இருக்கும். அதேசமயம், ஸ்மார்ட்போன்களின் சராசரி விற்பனை விலை முந்தைய ஆண்டைக் காட்டிலும் 12 சதவீதம் அதிகமாக இருக்கும் என அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி

தலைமை பொருளாதார ஆலோசகர் வி. ஆனந்த நாகேஸ்வரன் கூறுகையில், 2023ம் ஆண்டுக்குள் நாம் செல்லும்போது நாட்டின் பொருளாதாரம் 7 சதவீதம் என்ற நிலையான வளர்ச்சியை அடையும் நல்ல நிலையில் இருக்கும் என தெரிவித்தார். இருப்பினும் இது, 2022 ஜனவரியில் அரசாங்கத்தின் பொருளாதார ஆய்வறிக்கையில் வழங்கப்பட்ட நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8 முதல் 8.5 சதவீதம் வளர்ச்சி ஏற்படும் என்ற மதிப்பீட்டை காட்டிலும் குறைவாகும்.