வர்த்தக துளிகள்.. 500 பணியாளர்களை நீக்கும் ஓலா..

 
பணி நீக்கம்

ஓலாவின் தாய் நிறுவனமான ஏ.என்.ஜி. டெக்னாலஜிஸின் பல்வேறு சாப்ட்வேர் குழுக்களில் சுமார் 500 பணியாளர்களை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல். ஒலா நிறுவனம் கடந்த ஆண்டு முதல் புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்க திட்டமிட்டு வருகிறது. இருப்பினும், சாதகமற்ற சந்தை நிலைமைகைளை கருத்தில் கொண்டு அதன் திட்டத்தை நிறுத்தி வைத்திருந்தது. இதற்கிடையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் சுமார் 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.

கோதுமை

இந்திய ரோலர் மாவு மில்லர்கள் கூட்டமைப்பின் நிகழ்ச்சியில்  கலந்து கொண்ட உணவுத்துறை செயலர் சுதன்ஷூ பாண்டே பேசுகையில், நாட்டில் கோதுமைக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அரசு சொந்தமான  இந்திய உணவு கழகத்தின் குடோன்களில் 2.40 கோடி டன் கோதுமை உள்ளது. ஊக வர்த்தகம் காரணமாக கோதுமை விலை உயர்ந்துள்ளது. நாட்டில் போதுமான கோதுமை இருப்பு இருக்கிறது என்று தெரிவித்தார்.

லாக்டவுனால் அதானி பவர் நிறுவனத்தின் நஷ்டம் எகிறியது..

அம்புஜா சிமெண்ட்-ஏசிசி ஆகிய நிறுவனங்களை அதானி குழுமம் கையகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனங்களை கையகப்படுத்திய பிறகு அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி பணியாளர்களிடம் உரையாற்றினார்.  அப்போது, நிறுவனங்களின் சிமெண்ட் உற்பத்தி திறனை அடுத்த 5 ஆண்டுகளில்  2 மடங்கு அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். சிமெண்ட் உற்பத்தி தற்போதைய 7 கோடி டன் திறனில் இருந்து 14 கோடி டன்னாக உயரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என கவுதம் அதானி தெரிவித்தார்.

ரயில்

ரயில் என்ஜின்களில் சிறுநீர் கழிப்பறை வசதியை செய்து  கொடுக்கும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் டிரைவர்கள் இந்திய ரயில்வேயிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தற்போது ரயில் என்ஜின்களில் சிறுநீர் கழிப்பறைகளை உருவாக்க ரயில்வே ஒப்புக் கொண்டுள்ளது. இந்திய ரயில்வேயின் 14 ஆயிரம் என்ஜின்களில் 97 என்ஜின்களில் மட்டுமே தற்போது இந்த வசதி உள்ளது.