இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை எவை தாக்கத்தை ஏற்படுத்தும்.. பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு..

 
பங்கு வர்த்தகம்

பணவீக்கம், கச்சா எண்ணெய் விலை உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர். 

கடந்த ஆகஸ்ட் மாத சில்லரை விலை பணவீக்கம், ஜூலை மாத தொழில்துறை உற்பத்தி குறித்த புள்ளிவிவரங்கள் இன்று வெளியாகிறது. கடந்த ஆகஸ்ட் மாத மொத்த விலை பணவீக்கம் குறித்த புள்ளிவிவரத்தை மத்திய அரசு வரும் புதன்கிழமை வெளியிடுகிறது. செப்டம்பர் 9ம் தேதியுடன் நிறைவடைந்த  வாரத்தில் அன்னிய செலாவணி கையிருப்பு குறித்த தகவல் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. சர்வதே சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த வாரம்  90 டாலருக்கும் (1 பேரல்) கீழ் சென்றது.

பணவீக்கம்

பேரியங் கேஜிஸ் தயாரிப்பு நிறுவனமான ஹர்ஷா இன்ஜினியர்ஸ் இன்டர்நேஷனல் புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்குகிறது. இந்நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு இம்மாதம் 14ம் தேதி தொடங்கி 16ம்  தேதி முடிவடைகிறது. அன்னிய முதலீட்டாளர்கள் தற்சமயம் தொடர்ந்து இந்திய பங்குகளில் முதலீடு செய்து வருகின்றனர். இது பங்கு வர்த்தகத்துக்கு சாதகமான அம்சமாகும். அதேசமயம் உள்நாட்டு முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர். முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளில் முதலீட்டை குவித்தால் பங்குச் சந்தைகள் விரைவில் புதிய உச்சத்தை தொடும். 

அன்னிய முதலீடு

சீனா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா இந்த வாரம் தங்களது முக்கிய பொருளாதார புள்ளிவிவரங்களை வெளியிட உள்ளன. இதுதவிர, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, அமெரிக்க டாலர் இன்டெக்ஸ், சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்களும் இந்திய பங்குச் சந்தைகளில் உயர்வு, தாழ்வை நிர்ணயம் செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.