வர்த்தக துளிகள்... கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளபோதிலும் பெட்ரோல், டீசல் விலை உடனடியாக குறைய வாய்ப்பில்லை

 
பெட்ரோல் விலை

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தற்போது 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு (1 பேரல் 86 டாலர்)  குறைந்ததுள்ள போதிலும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தற்சமயம் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வாய்ப்பில்லை என தகவல். ஏனென்றால் கடந்த சில மாதங்களில் ஏற்பட்ட பெரும் நஷ்டத்தை ஈடுசெய்யும் தற்போதைய விலையை சிறிது நாட்கள் எந்தவித மாற்றமும் இன்றி வைத்திருக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

சர்வதேச அளவில் பாலியஸ்டர் பைபர் மற்றும் நூல் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் பாலியஸ்டர், சுபாலெட்சுமி பாலிஸ்டர் லிமிடெட் மற்றும் சுபாலெட்சுமி பாலிடெக்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்களை மொத்தம் ரூ.1,592 கோடிக்கு வாங்கியுள்ளது. இந்த தகவலை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குச் சந்தை அமைப்பிடம் தெரிவித்துள்ளது.

5G  ஏலத்தில் பல லட்சம் கோடி மோசடி!!.. யாருக்காக இந்த குறைந்த விலை?? -  ஆ.ராசா குற்றச்சாட்டு..

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வரும் தீபாவளி பண்டிக்கைக்கு முன்னதாக 5ஜி சேவையை அமல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. பார்தி ஏர்டெல் இன்னும் ஒரு மாதத்துக்குள் 5ஜி சேவையை  அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் 5ஜி கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 2025ம் ஆண்டுக்குள் 1,950 கோடி டாலர் (சுமார் ரூ.1.56 லட்சம் கோடி)  முதலீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய பட்ஜெட்

எதிர்வரும் 2023-24ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தயாரிப்பதற்கான பூர்வாங்க பணிகளை வரும் அக்டோபர் 10ம் தேதி தொடங்க உள்ளதாக மத்திய நிதியமைச்சகத்தின் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024ல் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதாகல், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தனது இரண்டாவது ஆட்சிக் காலத்தில் தாக்கல் செய்யும் கடைசி முழு நிதியாண்டு பட்ஜெட் இதுவாகும். இதனால் இந்த பட்ஜெட்டை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் தயார் செய்வதில் மத்திய அரசு கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.