வர்ததக துளிகள்... கொதிக்கும் வெயில்.. பட்டைய கிளப்பும் ஏ.சி. விற்பனை

 
ஏ.சி.

நம் நாட்டில் சிறிது முன்னதாகவே கோடைக்காலம் வந்த விட்டதால், கடுமையான வெப்பம் நிலவுகிறது. வெப்பத்தை சமாளிக்க மக்கள் ஏ.சி. வாங்குகின்றனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 17.5 லட்சம் ஏ.சி.கள் விற்பனையாகி உள்ளதாவும், 2022ம் ஆண்டில் இதுவரை 90 லட்சம் ஏ.சி.கள் விற்பனை  செய்யப்பட்டுள்ளது. நுகா்வோர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் அப்ளையன்ஸ் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது

டாடா ஸ்டீல்

டாடா குழுமத்தில் அதிக லாபம் ஈட்டும் என்ற நிறுவனம் என்ற பெருமையை டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்திடமிருந்து டாடா ஸ்டீல் தட்டி பறித்துள்ளது. கடந்த நிதியாண்டில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் நிகர லாபமாக ரூ.38,327 கோடி ஈட்டியுள்ளது. அதேசமயம் கடந்த நிதியாண்டில் டாடா ஸ்டீல் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.41,749 கோடி ஈட்டியுள்ளது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்

அட்சய திரிதியை முன்னிட்டு நேற்று நகை்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டுதான் அட்சய திரிதியை நாளில் நகைக்கடைகள் திறந்து இருந்தன. அட்சய திரிதியை அன்று நாடு முழுவதுமாக சுமார் 28 டன் தங்கம் விற்பனையாகி உள்ளதாக தங்க துறையை சேர்ந்த செயல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 2019ம் ஆண்டு அட்சய திரிதியை அன்று 22 டன் தங்கம் விற்பனையாகி இருந்தது.

ஏற்றுமதி, இறக்குமதி

2022-23ம் நிதியாண்டின் முதல் மாதமான கடந்த ஏப்ரல் மாதத்தில்  நம் நாட்டின் சரக்குகள் ஏற்றுமதி இதுவரை இல்லாத அளவுக்கு 3,819 கோடி டாலராக உயர்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் சரக்குகள் இறக்குமதி 5,826 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இதனையடுத்து நாட்டின் வர்த்தக பற்றாக்குறை (ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் இடையிலான வித்தியாசம்) 2,007 கோடி டாலராக உள்ளது.