வர்த்தக துளிகள்.. கார் கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்த பேங்க் ஆப் பரோடா

 
பேங்க் ஆஃப் பரோடா வங்கி

பேங்க் ஆப் பரோடா கார் கடனுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்துள்ளது. இதன்படி, புதிய கார் கடனுக்கான வட்டி விகிதம் 7.25 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக பேங்க் ஆப் பரோடா குறைத்துள்ளது. மேலும் பேங்க் ஆப் பரோடா பிராசிங் கட்டணத்தை ரூ.1,500 ப்ளஸ் ஜி.எஸ்.டி. என (குறிப்பிட்ட காலத்துக்கு) குறைத்துள்ளது. தற்போது வாகன கடன் செலுத்தி கொண்டு இருக்கு வாடிக்கையாளர்களுக்கு வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என வங்கி தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப் பே

மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ்அப் கடந்த சில தினங்களுக்கு தனது மாதாந்திர அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த மார்ச் 1 முதல் மார்ச் 31ம் தேதி வரையிலான காலத்தில் 18.05 லட்சம் இந்திய வாட்ஸ்அப் கணக்குகளை பிளாக் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. விதிமீறல்களை தடுப்பதற்கும், கண்டறிவதற்கும் அதன் மெக்கானிசம் மூலம் குறைகள் சேனல் மூலம் பயனாளர்களிடமிருந்து பெறப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

கோக கோலா

சர்வதேச அளவில் மிகப்பெரிய குளிர்பானங்கள் தயாரிப்பு நிறுவனமான கோக கோலா தனது தயாரிப்புகளின் விலை உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது. கோக கோலா இந்தியா மற்றும் தென்மேற்கு ஆசியாவின் தலைவர் சங்கேத் ரே பேட்டி ஒன்றில், பல்வேறு காரணங்களால் பணவீக்கம் தற்போதைய வரம்பில் இன்னும் சில காலாண்டுகளுக்கு இருக்கும். குறிப்பிட்ட பேக்குகளுக்கு (குளிர்பானங்கள்) விலை உயர்வு இருக்கும் என்று தெரிவித்தார்.

நிலக்கரி

நாட்டின் பல பகுதிகளில் மின் வெட்டு நிலவுகிறது. மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி போதிய சப்ளை இல்லாததே இதற்கு முக்கிய காரணம் கூறப்பட்டது. இந்நிலையில் நாட்டின் மிகப்பெரிய கோல் உற்பத்தி நிறுவனமான கோல் இந்தியா கடந்த மாதத்தில் மின் துறைக்கு 4.97 கோடி டன் நிலக்கரி சப்ளை செய்துள்ளதாகவும், 2021 ஏப்ரல் மாதத்தை காட்டிலும் 15.6 சதவீதம் அதிகம் என்றும் தெரிவித்துள்ளது.