வர்த்தக துளிகள்.. ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கிலோ மீட்டர் செல்லும் மின்சார காரை தயாரிக்கும் டாடா

 
அவின்யா

நம் நாட்டின் மிகப்பெரிய மின்சார கார் தயாரிப்பு  டாடா மோட்டார்ஸ், பேட்டரியில் இயங்குவதுடன், ஒரு முறை சார்ஜ் ஏற்றினால் 500 கி.மீட்டர் பயணிக்கும் வகையிலான மின்சார கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. டாடா மோட்டார்ஸின் அவின்யா EV கான்செப்ட் மின்சார வாகனங்களுக்கான ஸ்கேட் போர்ட் இயங்குதளத்தை கொண்டுள்ளது. புதிய ஜெனரல் 3 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட முதல் மின்சார வாகனம்  2025ம் ஆண்டில் வெளிவரும் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

மாருதி சுசுகி கார் மாடல்கள்

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா, கடந்த மார்ச் காலாண்டில் (2022 ஜனவரி-மார்ச்) மொத்தம் 4.88 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. இது 2021 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 0.7 சதவீதம் குறைவாகும். மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டில் உள்நாட்டில் 4.20 லட்சம் வாகனங்களையும், 68,454 வாகனங்களையும் விற்பனை செய்துள்ளது.

நிலக்கரி விற்று ரூ.4,638 கோடி லாபம் பார்த்த கோல் இந்தியா

முக்கிய 8 துறைகள் என்பது கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சிமெண்ட், நிலக்கரி, மின்சாரம், உருக்கு,  பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள் மற்றும் உரம் ஆகியவையாகும்.  2022 மார்ச்  மாதத்தில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி 4  சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது. 2022 பிப்ரவரி மாதத்தில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி 6 சதவீதம் வளர்ச்சி கண்டு இருந்தது.

அன்னிய செலாவணி

இந்தியாவின் அன்னிய  செலாவணி கையிருப்பு கடந்த 22ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 327 கோடி டாலர் குறைந்து 60,042 கோடி டாலராக சரிவடைந்துள்ளது என இந்திய ரிசர்ச் வங்கி தெரிவித்துள்ளது. ஏப்ரல் 15ம் தேதியுடன் முடிவடைந்த அதற்கு முந்தைய வாரத்தில்  அன்னிய செலாவணி கையிருப்பு 31.10 கோடி டாலர்  குறைந்து 60,369 கோடி டாலராக இருந்தது. இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு தொடர்ந்து 7வது முறையாக குறைந்து உள்ளது.