வர்த்தக துளிகள்.. ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை 1 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு

 
“ஹலோ அரசு சலுகை வேணுமா?” – போனில் ஒலிக்கும் மோசடி குரல்… எச்சரிக்கும் ரிசர்வ் வங்கி!

கடந்த ஏப்ரல் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 7.79 சதவீதமாக உயர்ந்துள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்திய ரிசர்வ் வங்கி ஏற்கனவே முக்கிய கடனுக்கான வட்டி விகிதத்தை 0.40 சதவீதம் உயர்த்தியது. இந்த சூழ்நிலையில் இந்த நிதியாண்டில் (2022-23) இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 1 சதவீதம் வரை உயர்த்த வாய்ப்புள்ளதாக தர நிர்ணய நிறுவனமான கிரிசல் தெரிவித்துள்ளது.

கேம்ப்பெல் வில்சன்

டாடா சன்ஸ் நிறுவனம் ஒரு வழியாக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு புதிய தலைமை செயல் அதிகாரியை நியமனம்  செய்து விட்டது. கேம்ப்பெல் வில்சன் என்பவரை ஏர் இந்தியாவின் புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக டாடா சன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேவையான ஒழுங்குமுறை அனுமதிகளுக்கு உட்பட்டு வில்சனின் நியமனத்துக்கு ஏர் இந்தியா வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. 50 வயதான கேம்ப்பெல் வில்சன், முழு சேவை மற்றும் குறைந்த கட்டண விமான நிறுவனங்களில் விமான போக்குவரத்து துறையில் ஆகிய இரண்டிலும் 26 ஆண்டு கால அனுபவம் பெற்றவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ-பிபி பல்க்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பிபி ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஜியோ-பிபி என்ற பிராண்டில் நாடு முழுவதும் 1,400 எரிபொருள் சில்லரை விற்பனை நிலையங்களை நடத்தி வருகின்றன. இந்த சூழ்நிலையில், தினமும் டீசல் விற்பனையில் லிட்டருக்கு ரூ.10 முதல் ரூ.12 வரை நஷ்டம் ஏற்பட்டது இதனால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது டீலர்களுக்கு எரிபொருள் விநியோகத்தை பாதியாக குறைத்தது. மேலும் எரிபொருள் விநியோகத்தை முழுமையாக தொடங்கவில்லை. இந்நிலையில் சில்லரை எரிபொருள் விற்பனை நிலையங்களை மூடுவதை தவிர்க்க, டீலர்களுக்கு நிதி உதவி செய்வது உள்ளிட்ட வாய்ப்புகளை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆலோசனை செய்து வருவதாக தகவல்.

டி.வி. சோமநாதன்

இந்திய ரிசர்வ் வங்கி எதிர்வரும் ஜூன் நிதிக் கொள்கை கூட்டத்தில், இந்த நிதியாண்டுக்கான பணவீக்க மதிப்புகளை உயர்த்த வாய்ப்புள்ளது. மேலும், வட்டி விகிதத்தை உயர்த்துவது குறித்து பரிசீலிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில், ரிசா்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தினால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைய வாய்ப்புள்ளது என மத்திய நிதி அமைச்சகத்தின் செயலாளர் டி.வி. சோமநாதன் தெரிவித்துள்ளார்.