பங்குச் சந்தைகளில் கரடியின் ஆதிக்கம்.. 4 தினங்களில் சென்செக்ஸ் 674 புள்ளிகள் குறைந்தது..

 
ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.3.39 லட்சம் கோடி நஷ்டம்! சென்செக்ஸ் 793 புள்ளிகள் வீழ்ச்சி!

கடந்த வாரம் இந்திய பங்குச் சந்தைகளில் கரடியின் ஆதிக்கம் நிலவியது. 4 வர்த்தக தினங்களில் சென்செக்ஸ் 674 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

ஹோலி பண்டிகையை முன்னிட்டு கடந்த செவ்வாய்க்கிழமையன்று இந்திய பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை. ஆகையால் கடந்த வாரம் மொத்தம் 4 தினங்கள் மட்டுமே பங்கு வர்த்தகம் நடைபெற்றது. கடந்த திங்கள் மற்றும் புதன் ஆகிய தினங்களில் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பங்கு வர்த்தகம் சரிவு கண்டது. அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகித உயர்வு நடவடிக்கை தீவிரமாக இருக்கும் என்று அதன் தலைவர்  ஜெரோம் பவல் மீண்டும் உறுதியாக தெரிவித்தது, அதானி குழும நிறுவனங்களின் பங்குகளின் விலை சரிவிலிருந்து மீண்டு வருவது, முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தது போன்றவை கடந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தின.

அமெரிக்க பெடரல் வங்கி

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு கடந்த வெள்ளிக்கிழமையன்று வர்த்தகம் நிறைவடைந்தபோது ரூ.262.60  லட்சம் கோடியாக இருந்தது. முந்தைய வார வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 3) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.263.40 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.80 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி
 
நம் நாட்டு பங்குச் சந்தைகளில், கடந்த வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த கடந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 673.84 புள்ளிகள் குறைந்து 59,135.13 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 181.45 புள்ளிகள் சரிவு கண்டு 17,412.90 புள்ளிகளில் முடிவுற்றது.