5 தினங்களில் சென்செக்ஸ் 1,498 புள்ளிகள் உயர்ந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.5.53 லட்சம் கோடி லாபம்..

 
தொடர்ந்து 2வது நாளாக முதலீட்டாளர்கள் ஹேப்பி! சென்செக்ஸ் 157 புள்ளிகள் உயர்வு!

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 1,498 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் முதல் 2 தினங்களிலும் வர்த்தகம் சரிவை சந்தித்தது. இருப்பினும், இன்று வரையிலான 3 தினங்களிலும் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. அமெரிக்காவின் பொருளாதாரத்தில் சரிவு, முன்னணி நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் சிறப்பாக இருந்தது, அமெரிக்க பெடரல் வங்கி எதிர்பார்ப்புக்கு இணையாக வட்டி விகிதத்தை உயர்த்தியது, கச்சா எண்ணெய் விலை நிலவரம், அன்னிய முதலீட்டாளர்கள் மீண்டும் இந்திய பங்குகளில் முதலீடு செய்ய தொடங்கியது போன்றவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தின.

அமெரிக்க பெடரல் வங்கி

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு இன்று வர்த்தகம் நிறைவடைந்தபோது ரூ.266.57 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த வார வெள்ளிக்கிழமையன்று (ஜூலை 22 ) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.261.04 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.5.53 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

பங்கு வர்த்தகம் ஏற்றம்

நம் நாட்டு பங்குச் சந்தைகளில், இன்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,497.92 புள்ளிகள் உயர்ந்து 57,570.25 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 438.80 புள்ளிகள் ஏற்றம் கண்டு 17,158.25 புள்ளிகளில் முடிவுற்றது.