வர்த்தக துளிகள்.. ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் ஊதியம் ரூ.15 கோடி..

 
சுனில் மிட்டல்

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனம் பார்தி ஏர்டெல். கடந்த 2021-22ம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டலின் ஊதியம் ரூ.15.39 கோடியாக குறைந்துள்ளது. இது முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 5 சதவீதம் குறைவாகும். 2020-21ம் நிதியாண்டில் சுனில் மிட்டல் மொத்த ஊதியமாக ரூ.16.19 கோடி பெற்று இருந்தார் இந்த தகவலை பார்தி ஏர்டெல் நிறுவனம் தனது ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

அபராதம்

20221-22ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது கடந்த ஜூன் 15ம் தேதி தொடங்கி விட்டது. வருமான வரி கணக்கை தாக்கல் செய்தவற்கு ஜூலை 31ம் தேதியாகும். இந்த ஆண்டு வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை நீட்டிக்க வாய்ப்பில்லை என்று மத்திய அரசு தெளிவாக சொல்லிவிட்டது. ஆகையால் இதுவரை வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதவர்கள் இன்னும் 5 தினங்களுக்குள் தாக்கல் செய்து விடுங்கள். கடைசி தேதியை தாண்டிவிட்டால் அபராதத்தோடு வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டியது இருக்கும்.

அடுத்தடுத்து தீ பிடிக்கும் எலக்ட்ரிக் வாகனங்கள் – முக்கிய அறிவிப்பு வெளியிட்ட OLA நிறுவனம் ..

மின்சார வாகனங்கள் தீப்பிடிக்கும் சம்பவங்கள் பல நடந்துள்ளபோதிலும், இரு சக்கர மின்சார வாகனங்கள் விற்பனை வரும் ஆண்டுகளில் சிறப்பாக இருக்கும் என கணிப்புகள் வெளியாகியுள்ளது. 2030ம் ஆண்டுக்குள் இரு சக்கர மின்சார வாகனங்கள் விற்பனை 78 சதவீதம் அதிகரிக்கும் என அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க கொள்கைகள், தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு மற்றும் நுகர்வோர் ஏற்றுக்கொள்ளல் போன்றவை மின்சார வாகனங்களுக்கான  குறிப்பாக இரு சக்கர வாகன பிரிவுக்கான நேர்மறைக் கண்ணோட்டத்தை (விற்பனை அதிகரிக்கும்) அளிக்கிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடியின் 6 ஆண்டு ஆட்சி காலத்தில் 18,065 கி.மீட்டர் தொலைவுக்கு ரயில் பாதை மின்மயமாக்கல்.. பியூஸ் கோயல்

மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஸ் கோயல் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், பருத்தி உற்பத்தியில் உலகத் தரத்தை இந்தியா கடைப்பிடிக்க வேண்டிய நேரம் இது. உற்பத்தியை அதிகரிக்க அனைத்து தரப்பினரும் சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும். பிரதமர் நரேந்திர மோடியின், பண்ணை முதல் பைபர் வரை, பைபர் முதல் தொழிற்சாலை, தொழிற்சாலை முதல் பேஷன் வரை, பேஷன் முதல் வெளிநாடு (ஏற்றுமதி) என்ற 5எப் தொலைநோக்கு பார்வையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.