வர்த்தக துளிகள்.. 1,200 ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கல்- அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

 
அஸ்வினி வைஷ்ணவ்

நாடாளுமன்றத்தில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: பல்வேறு சிறிய மற்றும் பெரிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்கள் உள்பட ரயில் நிலையங்களை மேம்படுத்துதல், நவீனப்படுத்துதல் மற்றும் விரிவாக்கம் செய்வதற்கான பல்வேறு மேம்பாட்டு திட்டங்களை ரயில்வே அமைச்சகம் வகுத்துள்ளது. நாடு முழுவதும் நவீனமயமாக்குதவற்காக 1,200 ரயில் நிலையங்களை அரசு அடையாளம் கண்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

5ஜி

நம் நாட்டில் முதல் முறையாக  5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் இறுதி பங்கேற்பாளர்களாக ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடாபோன் ஐடியா மற்றும் அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் தொலைத்தொடர்பு துறை அனுமதி அளித்துள்ளது. ஏலம் கேட்கும் நிறுவனங்களில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிகபட்சமாக டெபாசிட்டாக ரூ.14 ஆயிரம் செலுத்தியுள்ளதாக தகவல்.

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று 13 பைசா சரிந்து இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.80.05ஆக வீழ்ச்சி அடைந்தது. கச்சா எண்ணெய் அதிக அளவில் வாங்குவதற்கு இறக்குமதியாளர்களுக்கு அதிகளவில் டாலர் தேவைப்படுவதால், ரூபாய் மதிப்பு பாதிப்படைகிறது என கூறப்படுகிறது. ரூபாய் மதிப்பு  தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருவது ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமாகும்.

சரக்கு மற்றும் சேவைகள் வரி

அத்தியாவசிய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. விதிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், கேரளாவில் குடும்பஸ்ரீ மற்றும் சிறு கடைகளில் விற்கப்படும் பொருட்களுக்கு (1 அல்லது 2 கிலோ பாக்கெட்களில் விற்கப்படும்) சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) விதிக்கப்படாது என அம்மாநில நிதியமைச்சர் கே.என். பாலகோபால் அறிவித்தார்.