சென்செக்ஸ் 367 புள்ளிகள் உயர்ந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.02 லட்சம் கோடி லாபம்

 
சென்செக்ஸ்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 367 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும் பின்னர் பங்கு வர்த்தகம் சிறிய சரிவை சந்தித்தது. ஆனாலும் சிறிது நேரத்துக்கு பிறகு பங்கு வர்த்தம் மீண்டும் உயர தொடங்கியது. இறுதியில் இன்று பங்கு வர்த்தகம் உயர்வுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பஜாஜ் பின்சர்வ் மற்றும் பஜாஜ் பைனான்ஸ் உள்பட மொத்தம் 18  நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டெக்மகிந்திரா மற்றும் இன்போசிஸ் உள்பட மொத்தம் 12 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

கோடீஸ்வரர்கள் நிறைந்த இன்போசிஸ் நிறுவனம்… கோடீஸ்வர பணியாளர்களின் எண்ணிக்கை 74ஆக உயர்ந்தது

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,828 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,556 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 97 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.272.40 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.02 லட்சம் கோடி லாபம் கிடைத்தது. 

பங்கு வர்த்தகம்

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 367.22 புள்ளிகள் உயர்ந்து 60,223.15 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 120.00 புள்ளிகள் ஏற்றம் கண்டு 17,925.25 புள்ளிகளில் முடிவுற்றது.