சென்செக்ஸ் 651 புள்ளிகள் உயர்ந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.2.39 லட்சம் கோடி லாபம்..

 
இந்த வாரம் காளைக்கு வெற்றி! சென்செக்ஸ் 200 புள்ளிகள் உயர்ந்தது!

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 651 புள்ளிகள் உயர்ந்தது.

பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் தங்களது டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட தொடங்கி விட்டன. நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் சிறப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு, முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டைட்டன் மற்றும் மாருதி உள்பட மொத்தம் 20 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், விப்ரோ மற்றும் நெஸ்லே இந்தியா உள்பட மொத்தம் 10 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மாருதி சுசுகி கார் மாடல்கள்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 2,646 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,000 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 107 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.274.68 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.2.39 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ்
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 650.98 புள்ளிகள் உயர்ந்து 60,395.63 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 190.60 புள்ளிகள் ஏற்றம் கண்டு 18,003.30 புள்ளிகளில் முடிவுற்றது.