வர்த்தக துளிகள்.. அக்டோபர் 12ம் தேதிக்குள் 5ஜி சேவை-மத்திய அமைச்சர் உறுதி

 
5G  ஏலத்தில் பல லட்சம் கோடி மோசடி!!.. யாருக்காக இந்த குறைந்த விலை?? -  ஆ.ராசா குற்றச்சாட்டு..

மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: நம் நாட்டில் அக்டோபர்  12ம் தேதிக்குள் 5ஜி சேவை தொடங்கப்படும். அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் 5 ஜி சேவை நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் சென்றடைய வேண்டும் என்பதை எங்கள் எதிர்பார்ப்பு. அது மலிவு விலையில் இருப்பதை உறுதி செய்வோம். தொலைத்தொடர்பு துறை நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் கவனம் செலுத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மெர்சிடிஸ் பென்ஸ் மின்சார கார்

ஜெர்மனை சேர்ந்த ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், இந்தியாவில் மிகவும் விலை உயர்ந்த மின்சார காரான AMS EQS 53 4MATIC+ செடான் காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த காரின் விலை ரூ.2.45 கோடியாகும் (ஷோரூமுக்கு முந்தைய விலை). நிலையான நிலையில் காரின் பேட்டரியை ஓரு முறை சார்ஜ் செய்தால் 529 முதல் 586 கி.மீட்டர் தூரம் பயணிக்கலாம் என்பது இதன் சிறப்பம்சம்.

ஜியோமி போன்

சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஜியோமி நிறுவனம் நம் நாட்டில் பல்வேறு வரிஏய்ப்பு குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ளது. ஜியோமி நிறுவனம் நம் நாட்டில் 2020 மே முதல் 2022 ஜூன் வரையிலான 26 மாத காலத்தில் 70 லட்சத்துக்கும் அதிகமான 5ஜி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளதாக ஐ.டி.சி. இந்தியா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடி

பிரதமர் மோடி நேற்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தொழிலாளர் அமைச்சர்களின் தேசிய மாநாட்டில் பேசுகையில், எதிர்காலத்திற்கு நெகிழ்வான வேலை நேரம் மற்றும் பணியிடங்கள் மற்றும் வீட்டிலிருந்து வேலை செய்யும் சூழல்  தேவை. அதேநேரத்தில் நாடு வளர்ந்து வரும் வேலையின் பரிமாணங்களை அறிந்திருக்க வேண்டும். மாறும் சூழ்நிலைக்கு ஏற்ப மாற வேண்டும் என தெரிவித்தார்.