முதலீட்டாளர்களின் கையை கடித்த பங்கு வர்த்தகம்.. 5 தினங்களில் சென்செக்ஸ் 136 புள்ளிகள் சரிவு

 
ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.3.39 லட்சம் கோடி நஷ்டம்! சென்செக்ஸ் 793 புள்ளிகள் வீழ்ச்சி!

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 136 புள்ளிகள் குறைந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் கடந்த செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய தினங்களை மற்ற 3 தினங்களிலும் பங்கு வர்த்தகம் வீழ்ச்சி கண்டது. அமெரிக்க பெடரல் வட்டி விகிதத்தை உயர்த்துவது உறுதி, நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள், ரஷ்யாவின் உக்ரைன் மீதான படையெடுப்பு, உலக நாடுகளில் மீண்டும் கொரோனா தலைதூக்குவது போன்றவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தின.

அமெரிக்க பெடரல் வங்கி
மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தகம் நிறைவடைந்தபோது ரூ.266.93 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த வார புதன்கிழமையன்று (ஏப்ரல் 22) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.269.69 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் .முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.2.29 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி
நம் நாட்டு பங்குச் சந்தைகளில், கடந்த வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 136.28 புள்ளிகள் குறைந்து 57,060.87 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 69.40 புள்ளிகள் சரிவு கண்டு 17,102.55 புள்ளிகளில் முடிவுற்றது.