பங்குகளை வாங்கி குவித்த முதலீட்டாளர்கள்.. சென்செக்ஸ் 443 புள்ளிகள் உயர்ந்தது..

 
சென்செக்ஸ்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 443 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், சன்பார்மா மற்றும் ஐ.டி.சி. உள்பட மொத்தம் 24 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், நெஸ்லே இந்தியா மற்றும் அல்ட்ராடெக் சிமெண்ட் உள்பட மொத்தம் 6 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சன் பார்மா

மும்பை பங்குச் சந்தையில் இன்று 2,213  நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,349 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 179 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.279.81 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.1.40 லட்சம்  கோடி லாபம் கிடைத்தது.

பங்கு வர்த்தகம் ஏற்றம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 442.65 புள்ளிகள் உயர்ந்து 59,245.98 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 126.35 புள்ளிகள் ஏற்றம் கண்டு 17,665.80 புள்ளிகளில் முடிவுற்றது.