வர்த்தக துளிகள்.. நவம்பர் 19ம் தேதி வங்கி சேவைகள் பாதிக்கப்படும் வாய்ப்பு..

 
வங்கி ஸ்டிரைக்

அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 19ம் தேதி (மூன்றாவது சனிக்கிழமை) நாடு தழுவிய வேலைநைிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனால் ஏ.டி.எம். உள்ளிட்ட வங்கி சேவைகள் 19ம் தேதி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்தியா முழுவதும் உள்ள வங்கிகள் அனைத்தும் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை மூடப்பட்டிருக்கும்.

இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம்

இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, நம் நாட்டில் இந்த நிதியாண்டின் முதல் 3 மாதங்களில் (ஏப்ரல்-ஜூன்) பூச்சிகொல்லிகள், சாயங்கள் மற்றும் நிறமிகளை தவிர்த்து முக்கிய இரசாயனங்கள் உற்பத்தி 7.22 சதவீதம் உயர்ந்து 32.56 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. இது சென்ற நிதியாண்டின் இதே காலாண்டில்  30.37 லட்சம் டன் முக்கிய இரசாயனங்கள் உற்பத்தி செய்யப்பட்டு இருந்தது.

நிலக்கரி

கடந்த அக்டோபர் 31ம் தேதி நிலவரப்படி, உள்நாட்டு அனல் மின் நிலையங்களில் மொத்தம் 2.56 கோடி டன் நிலக்கரி கையிருப்பு உள்ளது. இது 2020-21ம் நிதியாண்டை தவிர, அக்டோபர் மாதத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக  உள்ள மத்திய அரசு  தெரிவித்துள்ளது. மின் துறைக்கு நிலக்கரி வழங்குவது நிலக்கரி அமைச்சகத்தால் மின்சாரம் மற்றும் ரயில்வே அமைச்சகங்களுடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் நிலக்கரி அமைச்சகத்தால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

வாகனங்கள்

வாகன டீலர்கள் கூட்டமைப்பு சங்கத்தின் புள்ளிவிவரத்தின்படி, கடந்த அக்டோபர் மாதத்தில் நம் நாட்டில் 20.94 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது 2021 அக்டோபர் மாதத்தை காட்டிலும் சுமார் 48 சதவீதம் அதிகமாகும். அந்த மாதத்தில் 14.18 லட்சம் வாகனங்கள் விற்பனையாகி இருந்தது. 2019 அக்டோபர் மாதத்தில் 19.33 லட்சம் வாகனங்கள் விற்பனையாகி இருந்தது.