வர்த்தக துளிகள்.. 2025ம் ஆண்டுக்குள் யூரியா இறக்குமதியை நிறுத்த இலக்கு

 
பொள்ளாச்சியில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 12 டன் யூரியா பறிமுதல்!

வர்த்தக துளிகள்.. 2025ம் ஆண்டுக்குள் யூரியா இறக்குமதியை நிறுத்த இலக்கு

மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா செய்தியாளர்களிடம் கூறுகையில், 2025ம் ஆண்டுக்குள் யூரியா இறக்குமதியை நிறுத்த இந்தியா இலக்கு வைத்துள்ளது. புதிய ஆலைகள் இயக்குவதன் மூலம் உள்நாட்டு உற்பத்தி திறன் அதிகரிக்கப்படும். 2025ம் ஆண்டுக்குள் 5 புதிய யூரியா ஆலைகள் தொடங்கப்படும் என தெரிவித்தார்.  நம் நாடு ஆண்டுதோறும் சராசரியாக 3.50 கோடி டன் யூரியா உரத்தை இறக்குமதி செய்கிறது.

எத்தனால்

பெட்ரோலில் கலப்பதற்கு பயன்படுத்தப்படும் எத்தனாலின் விலை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு, 2022 டிசம்பரில் தொடங்கும் விநியோக ஆண்டுக்கு, கரும்புசாற்றில் இருந்து எடுக்கப்படும் எத்தனாலின் விலையை ரூ.63.45-லிருந்து ரூ.65.60ஆக உயர்த்தியுள்ளது. தற்போது பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலக்கப்படுகிறது. சோதனை அடிப்படையில் 2023 ஏப்ரல் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட பெட்ரோல் பம்புகளில் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் விநியோகம் செய்யப்பட உள்ளதாக தகவல்.

5G  ஏலத்தில் பல லட்சம் கோடி மோசடி!!.. யாருக்காக இந்த குறைந்த விலை?? -  ஆ.ராசா குற்றச்சாட்டு..

தகவல் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனமான பார்தி ஏர்டெல் அண்மையில், சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி மற்றும் ஹைதராபாத்  உள்ளிட்ட நாட்டின் முக்கிய 8 நகரங்களில் வணிக ரீதியாக  5ஜி தொலைத் தொடர்பு சேவையை அறிமுகம் செய்தது. இந்நிலையில், 5ஜி சேவை அறிமுகப்படுத்திய 30 நாட்களுக்குள் 10 லட்சத்துக்கும் அதிகமான பயனாளர்களை பெற்றுள்ளதாக பார்தி ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

மாருதி சுசுகி ஆலை

மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் தனது ஒட்டு மொத்த கார்கள் உற்பத்தி 2.5 கோடியை தாண்டியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் 1983 டிசம்பரில் மாருதி சுசுகி இந்தியா தனது வாகன உற்பத்தியை தொடங்கியது. 1994 மார்ச் மாதத்தில் அதன் வாகன உற்பத்தி 10 லட்சத்தை கடந்தது. 2011 மார்ச் மாதத்தில் உற்பத்தி 1 கோடியையும், 2018 ஜூலையில் 2 கோடி மைல்கல்லையும் கடந்தது குறிப்பிடத்தக்கது.