வர்த்தக துளிகள்.. கார், டி.வி. போன்ற விலை உயர்ந்த பொருட்களை இப்பம் வாங்காதீங்க.. எச்சரிக்கும் ஜெப் பியோஸ்..

 
இந்தியாவுக்கு வரும் உலக கோடீஸ்வரர் ஜெப் பியோஸ்! 300 நகரங்களில் போராட்டம் நடத்த தயாராகும் வர்த்தகர்கள்….

 உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக தளத்தின் உரிமையாளரும், உலகின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவருமான ஜெப் பியோஸ், பொருளாதாரம் மந்தநிலையை எதிர்நோக்கி உள்ளதால், வரவிருக்கும் மாதங்களில் தேவையற்ற செலவினங்களை நுகர்வோர் தவிர்க்க வேண்டும். கார்கள் மற்றும் தொலைக்காட்சிகள் போன்ற பெரிய பொருட்கள் வாங்குவதை அமெரிக்க குடும்பங்கள் தவிர்க்க வேண்டும், மக்கள் கொஞ்சம் பணத்தை சேமிக்க வேண்டும் என சக அமெரிக்கர்களை வலியுறுத்தியுள்ளார்.

பால்

இன்று முதல் டெல்லி என்சிஆர் சந்தையில் புல்கிரீம் பால் விலை லிட்டருக்கு ரூ.1ம், டோக்கன் பால் விலை லிட்டருக்கு ரூ.2ம் உயர்த்த மதர் டெய்ரி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டில் நான்காவது முறையாக மதர் டெய்ரி நிறுவனம் பால் விலையை உயர்த்தியுள்ளது. மூலதன செலவினம் அதிகரிப்பால் பால் விலையை உயர்த்தியுள்ளதாக மதர் டெய்ரி நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது. மதர் டெய்ரி நிறுவனம் டெல்லி என்சிஆர் சந்தையில் தினமும் 30 லட்சம் லிட்டருக்கு மேல் பால் விற்பனை செய்கிறது.

கவுதம் அதானி

அதானி குழுமத்தின் தலைவரும், இந்தியாவின் பெரும் கோடீஸ்வரருமான கவுதன் அதானி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், லட்சம் கோடி பொருளாதாரத்தை எட்ட இந்தியாவுக்கு 58 ஆண்டுகள் ஆனது. 2050ம் ஆண்டுக்குள் உலகின் 2வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும் என தெரிவித்தார். இந்தியா தற்போது உலகின் 5வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக விளங்குகிறது.

என்.எம்.டி.சி.

என்.எம்.டி.சி. நிறுவனம் கர்நாடகாவில் உள்ள குமாரசாமி சுரங்கங்களில் ஆண்டு இரும்புத்தாது உற்பத்தி திறனை 1 கோடி டன்னாக உயர்த்த அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் ரூ.900 கோடியை மூலதன செலவினமாக மேற்கொள்ள உள்ளது. தற்போது இந்த சுரங்களின் ஆண்டு இரும்புத்தாது உற்பத்தி திறன் 70 லட்சம் டன்னாக உள்ளது. குமாரசாமி சுரங்கங்கள் கர்நாடகாவின் பல்லாரி மாவட்டத்தில் உள்ளது.