வர்த்தக துளிகள்.. 18 ஆண்டுகளுக்கு பிறகு புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கும் டாடா குழுமம்

 
டாடா

டாடா குழுமம் 18 ஆண்டுகளுக்கு பிறகு புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்க உள்ளது. டாடா மோட்டார்ஸின் குளோபல் புராடக்ட் என்ஜினீயரிங் அண்ட் டிஜிட்டல் சர்வீசஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தை புதிய பங்கு வெளியீட்டில் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் 2023-24ம் நிதியாண்டின் முதல் நிதியாண்டில் டாடா டெக்னாலஜிஸ் புதிய பங்கு வெளியீடு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா குழுமம் இதற்கு முன் கடைசியாக 2004ல் டி.சி.எஸ். நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டை மேற்கொண்டு இருந்தது.

அமேசான்

மெட்டா, டிவிட்டரை தொடர்ந்து அமேசான் நிறுவனம் உலகம் முழுவதுமாக 10 ஆயிரம் பணியாளர்களை பணியிலிருந்து நீக்க உள்ளது. அமோசான் நிறுவனம் இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகம், இணையசேவைகள் மற்றும் வீடியோ ஸ்ட்ரீமிங் உள்ளிட்ட பல்வேறு வணிகங்களை நடத்துகிறது. பேஸ்புக் போன்ற பிற நிறுவனங்களை காட்டிலும் அமேசான் நிறுவனம் இந்தியாவில் அதிகளவில் பணியாளர்களை நீக்கலாம் என தகவல்  வெளியாகியுள்ளது.

ஏற்றுமதி

மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச தேவை குறைந்தது, உக்ரைன்-ரஷ்யா போர் ஆகியவற்றுக்கு மத்தியில் கடந்த அக்டோபரில் நம் நாட்டில் இருந்து 2,978 கோடி டாலர் மதிப்புக்கு சரக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் 17 சதவீதம் குறைவாகும். கடந்த அக்டோபரில் சரக்கு வர்த்தகத்தில் பற்றாக்குறை 2,691 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

5G  ஏலத்தில் பல லட்சம் கோடி மோசடி!!.. யாருக்காக இந்த குறைந்த விலை?? -  ஆ.ராசா குற்றச்சாட்டு..

நம் நாட்டில் கடந்த மாதம் 5ஜி சேவை தொடங்கப்பட்டது.இதனையடுத்து கடந்த மாதம் மத்திய அரசு மொபைல்போன் நிறுவனங்களிம் அவர்களது சாதனங்களை (மொபைல் போன்கள்) 5ஜி சேவைக்கு இணக்கமானதாக மாற்றுமாறு கேட்டுக்கொண்டது. ஆனால் சாம்சங் மற்றும் ஆப்பிள் போன்ற முன்னணி மொபைல் நிறுவனங்கள் இன்னும் தங்களது பல செல்போன்களை 5ஜி அப்டேட் செய்யவில்லை என தகவல்.