வர்த்தக துளிகள்.. மூன்றரை மாதத்தில் 32 லட்சம் திருமணங்கள்... சூடு பிடிக்கும் தங்கம், ஆடை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை

 
தங்கம் வாங்க உடனே கிளம்புங்க.... சவரன் ரூ. 38 ஆயிரத்திற்கும் கீழ் சரிவு..

நம் நாட்டில் நேற்று (நவம்பர் 15) முதல் 2023 பிப்ரவரி வரையிலான மூன்றரை மாத காலத்தில் நாடு முழுவதுமாக சுமார் 32 லட்சம் திருமணங்கள் வரிசையாக நடைபெற உள்ளன. திருமணத்துக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக மக்கள் கடைகளுக்கு வருவதால் சந்தைகள் பரபரப்பாக இருக்கின்றன. திருமண காலத்தை முன்னிட்டு, நுகர்வோர் மின்னணு பொருட்கள்,ஆடைகள், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் தங்கம் ஆகியவற்றின் தேவை அதிகரித்து வருகிறது என வர்த்தக துறையை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

எலான் மஸ்க் செய்த வேலையால் எகிறிய முதலீடு

உலகின் மிகப்பெரிய  கோடீஸ்வரரும், எலக்ட்ரிக் கார்களை தயாரித்து வரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், இந்தியா மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளுக்கு  குறைந்த விலை  டெஸ்லா கார் மாடலை உருவாக்கும் திட்டத்தை ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் மிகவும் மலிவு விலையில் வாகனம் தயாரிப்பது மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம், நாங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அமேசான்
உணவு, எலக்ட்ரிக் சாதனங்கள் உள்பட ஒவ்வொரு துறைகளிலும் நுகர்வோர் அதிகம் விரும்பும் மற்றும் பிராண்ட்களின் வலிமைக்கு ஏற்ப இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் பிராண்ட்கள் 2022 தரவரிசை பட்டியலை டி.ஆர்.ஏ. வெளியிட்டுள்ளது. டி.ஆர்.ஏ. அறிக்கையின்படி, இன்டர்நெட் பிராண்ட்கள் பட்டியலில் அமேசான், பேஸ்புக், பிளிப்கார்ட் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்கள் முறையே 1 முதல் 4 இடங்களில் உள்ளன. எரிசக்தி பிரிவில், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் முதல் இடத்திலும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் அதானி ஆகிய நிறுவனங்கள் முறையே 2வது மற்றும் 3வது இடத்தில் உள்ளன.

அனைத்து குடும்பங்களுக்கும் ஸ்மார்ட்போன்கள் இலவசம்…. ஒடிசா முதல்வர் அறிவிப்பு

இன்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேஷனின் சர்வதேச காலாண்டு மொபைல் டிராக்கர் அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த ஜூலை-செப்டம்பர் காலாண்டில் மொத்தம் 4.3 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகியுள்ளது. இது 2021 செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் 10 சதவீதம் குறைவாகும். ஸ்மார்ட்போன்களின் விலை உயர்வு மற்றும் தேவை குறைந்தது போன்றவையே கடந்த செப்டம்பர் காலாண்டில் ஸ்மார்ட்போன்கள் விற்பனையின் சரிவுக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.