வர்த்தக துளிகள்..2027ம் ஆண்டுக்குள் இந்தியா உலகின் 3வது பெரிய பொருளாதார பலம் நாடாக உருவெடுக்கும்..

 
பொருளாதார வளர்ச்சி

சர்வதேச முதலீட்டு வங்கியான மோர்கன் ஸ்டான்லி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2027ம் ஆண்டுக்குள் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் பலம் கொண்ட நாடாக உருவெடுக்கும் என்றும், 2030ம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது பெரிய பங்குச் சந்தையாகவும் மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் அடுத்த பத்தாண்டுகளில் 8.5 லட்சம் கோடி டாலரை தாண்டும். தற்போது இந்தியாவின் பொருளாதார மதிப்பு 3.4 லட்சம் கோடி டாலராக உள்ளது.

நமிதா தாபர்

அமெரிக்காவை சேர்ந்த போர்ப்ஸ் நிறுவனம்  ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் வணிகத்தில் சிறந்து விளங்கும் 20 பெண்களை கவுரவிக்கும் வகையில்,  2022ம் ஆண்டுக்கான ஆசியாவின் சக்திவாய்ந்த வணிக பெண்கள் பட்டியலலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் 3 இந்திய பெண்மணிகள் இடம் பிடித்துள்ளனர். ஹொனாசா கன்ஸ்யூமர் நிறுவனத்தின் தலைவி கஜல் அலக், செயில் நிறுவனத்தின் தலைவர் சோமா மொண்டல் மற்றும் எம்க்யூர் பார்மாவின் இந்திய வணிகத்தின் நிர்வாக இயக்குனர் நமிதா தாபர் ஆகிய இந்திய பெண் முதலாளிகள் போர்ப்ஸின் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

எலான் மஸ்க் செய்த வேலையால் எகிறிய முதலீடு

சர்வதேச அளவில் 20,000 கோடி டாலருக்கும் மேல் சொத்து மதிப்பு கொண்ட ஒரே நபர் என்ற பெருமை டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க்கிற்கு மட்டுமே இருந்தது. இந்நிலையில், டெஸ்லா நிறுவன பங்கின் விலை கடந்த சில வாரங்களாக சரிவை சந்தித்தது. இதனால் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 19,740 கோடி டாலராக குறைந்தது. இதனால் அந்நிறுவன பங்கின் விலை சரிந்தது இதன் எதிரொலியாக எலான் மஸ்கின் சொத்து மதிப்பு குறைந்தது. இதனால் 20,000 கோடி டாலர் கிளப்பில் இருந்து எலான் மஸ்க் வெளியேறினார்.

சட்ட செலவினம்

இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள 4,170 நிறுவனங்களின் ஆண்டு அறிக்கையின்படி, கடந்த 2021-22ம் நிதியாண்டில் இந்திய நிறுவனங்கள் சட்ட செலவினங்களுக்காக மொத்தம் ரூ.43,667 கோடி செலவிட்டுள்ளன. இது முந்தைய 2022-21ம் நிதியாண்டைக் காட்டிலும் 5.20 சதவீதம் குறைவாகும். அந்த நிதியாண்டில் இந்திய நிறுவனங்கள் ரூ.46,059 கோடியை சட்ட செலவினமாக மேற்கொண்டு இருந்தன. நிறுவனங்களின் சட்ட செலவுகளில், வழக்கு மற்றும் மத்தியஸ்தம், தொழில்முறை கட்டணம்,ஒழுங்குமுறை தாக்கல், அபராதம் மற்றும் பொது முத்திரை கட்டணம் ஆகியவை அடங்கும்.