வர்த்தக துளிகள்... மத்திய அரசின் நிதிபற்றாக்குறை ரூ.6.21 லட்சம் கோடி..

 
நிதிப் பற்றாக்குறை

இந்தியாவின் நிதி பற்றாக்குறை இந்த நிதியாண்டின் முதல் அரையாண்டில் (ஏப்ரல்-செப்டம்பர்)  மத்திய பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 37.3 சதவீதத்தை தொட்டுள்ளது. கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களில் மத்திய அரசுக்கு ரூ.12.03 லட்சம் கோடி வருவாய் வந்துள்ளது. அதேசமயம், மத்திய அரசு ரூ.18.24 லட்சம் கோடிக்கு செலவினங்களை மேற்கொண்டுள்ளது. இதனையடுத்து மத்திய அரசுக்கு அந்த காலாண்டில் ரூ.6.21 லட்சம் கோடி நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கி நவம்பர் 1ம் தேதி (இன்று) ஹோல்சேல் பிரிவில் டிஜிட்டல் ரூபாயின் முதல் முன்னோட்ட திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, எச்.டி.எப்.சி. வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, கோடக் மகிந்திரா வங்கி, யெஸ் வங்கி, ஐ.டி.எப்.சி. பர்ஸ்ட் மற்றும் எச்.எஸ்.பி.சி. உள்ளிட்ட 9 வங்கிகள் இந்த  சோதனை திட்டத்தில் பங்கேற்பதற்காக ரிசர்வ் வங்கி அடையாளம் கண்டுள்ளது.

நிலக்கரி

முக்கிய 8 துறைகள் என்பது கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சிமெண்ட், நிலக்கரி, மின்சாரம், உருக்கு,  பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள் மற்றும் உரம் ஆகியவையாகும். 2022 செப்டம்பர்  மாதத்தில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி 7.9 சதவீதம்  வளர்ச்சி கண்டுள்ளது. இது கடந்த 9 மாதங்களில் குறைந்தபட்ச வளர்ச்சியாகும். 2021 செப்டம்பர்  மாதத்தில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி 5.4 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது. 

மீண்டும் ஒரே மாதத்தில் 1 லட்சம் கார்களை விற்பனை விற்பனை செய்த மாருதி சுசுகி இந்தியா..

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா, கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி முதல் செப்டம்பர் 1ம் தேதி வரை தயாரிக்கப்பட்ட வேகன் ஆர், செலிரியோ மற்றும் இக்னிஸ்  மாடல்களின் 9,925 வாகனங்களை திரும்ப பெற உள்ளதாக தெரிவித்துள்ளது.  அந்த வாகனங்களில் பின்புற பிரேக் அசெம்பிளி பின்னில் உள்ள குறைபாட்டை சரிசெய்வதற்காக அந்த வாகனங்களை திரும்ப பெறுவதாக மாருதி சுசுகி இந்தியா தெரிவித்துள்ளது.