வர்த்தக துளிகள்.. சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் வரும் அக்டோபர் முதல் 5ஜி சேவை..

 
5G spectrum auctions

நம் நாட்டில் முதல் முறையாக  5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் கடந்த சில தினங்களாக நடந்தது. இந்நிலையில் டெல்லி, சென்னை, புனே மற்றும் பெங்களூரு போன்ற பெரிய நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் அக்டோபர் மாத தொடக்கத்தில் 5ஜி சேவைகள் பயன்படுத் முடியும். ஏனென்றால் தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் அடுத்த தலைமுறை நெட்வொர்க்கின் (5ஜி) சேவைகளை வெளியடுவதற்கான ஆரம்ப கட்ட பணிகளை தொடங்குகின்றனர்.

அரிசி

வங்கதேசம், ஈரான், ஈராக் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் இந்திய அரசிக்கான தேவை அதிகரித்துள்ளது மற்றும் நம் நாட்டில் பல மாநிலங்களில் நெல் சாகுபடி பரப்பு குறைந்தது போன்ற காரணங்களால் கடந்த ஜூன் தொடக்கத்தில் இருந்து அனைத்து வகை அரிசி வகைகளின் விலைகளும் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. ஏற்கனவே  அதிக பணவீக்கத்தை எதிர்கொண்டுள்ள இந்திய குடும்பங்கள் தற்போது இந்த அரிசி விலை உயர்வால் மேலும் பாதிக்கும்.

பெட்ரோல் பம்ப்

கடந்த ஜூலை மாதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் முறையே 12 மற்றும் 18 சதவீதம் அதிகரித்துள்ளது. 2021 ஜூலை மாதத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை குறைவாக இருந்தது மற்றும் தற்போது பொருளாதார நடவடிக்கைகள் வேகம் பெற்றது போன்ற காரணங்களால் கடந்த மாதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை அதிகரித்துள்ளது.

வாட்ஸ்அப்

மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ்அப் கடந்த ஜூன் மாதத்தில் மொத்தம் 22 லட்சத்துக்கும் அதிகமான கணக்குகளை தடை செய்துள்ளது என சமூக செய்தி தளத்தின் பயனர் பாதுகாப்பு மாதாந்திர அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.  முந்தைய மே மாதத்தில் வாட்ஸ்அப் 19 லட்சத்துக்கும் மேற்பட்ட கணக்குகளை தடை செய்து இருந்தது.