இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை எவை தாக்கத்தை ஏற்படுத்தும்.. பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு..

 
பங்கு வர்த்தகம்

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை ஆய்வு கூட்டம், வாகன விற்பனை உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர். 

இரு மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை ஆய்வு கூட்டம் வரும் 3 முதல் 5ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், கடனுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.50 சதவீதம் வரை உயர்த்த வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இன்று முதல் தங்களது கடந்த ஜூலை மாத வாகன விற்பனை குறித்த புள்ளிவிவரங்களை வெளியிடும். கடந்த ஜூலை மாத ஜி.எஸ்.டி. வசூல் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய அரசு இன்று வெளியிடுகிறது.

இந்திய ரிசர்வ் வங்கி

கடந்த சில மாதங்களாக இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதை காட்டிலும் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்து வந்த அன்னிய முதலீட்டாளர்கள், தற்போது மீண்டும் இந்திய பங்குகளை வாங்கி குவிக்க தொடங்கியிருப்பது பங்கு வர்த்தகத்துக்கு சாதகமான அம்சமாகும், இது தொடர்ந்தால் பங்குச் சந்தைகள் ஏற்றத்துக்கு வழி வகுக்கும். அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 80ஆக வீழ்ச்சி கண்ட பிறகு, ரூபாய் மதிப்பு விரைவாக வீழ்ச்சியிலிருந்து மீண்டது. வரும் வாரத்த்தில் 

இயல்பு நிலைக்கு திரும்பிய நாடு.. பிஸ்கட் விற்பனை சூப்பர்.. லாபமாக ரூ.453 கோடி அள்ளிய பிரிட்டானியா

இந்த வாரம் ஐ.டி.சி., யு.பி.ஐ., அதானி க்ரீன், பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், கெயில், அதானி பவர், அதானி வில்மர், இண்டிகோ மற்றும் நைகா உள்பட பல முன்னணி நிறுவனங்கள் தங்களது கடந்த ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிடுகின்றன. சீனா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா இந்த வாரம் தங்களது முக்கிய பொருளாதார புள்ளிவிவரங்களை வெளியிட உள்ளன. இதுதவிர, பருவமழை நிலவரம், சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்களும் இந்திய பங்குச் சந்தைகளில் உயர்வு, தாழ்வை நிர்ணயம் செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.