வர்த்தக துளிகள்... இந்திய ரிசர்வ் வங்கியை பாராட்டிய ரகுராம் ராஜன்

 
ஏழைகளுக்கு உதவ ஆலோசனை வழங்கிய ரகுராம் ராஜன்… எவ்வளவு நேரம் பேசினார் என ஆராய்ச்சி செய்யும் பா.ஜ.க-வினர்!

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் பேட்டி ஒன்றில் கூறியதாவது: பாகிஸ்தான் மற்றும் இலங்கை போன்ற அண்டை நாடுகளால் எதிர்கொள்ளப்படும் பிரச்சினைகளில் இருந்து இந்தியாவை காப்பாற்றும், இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பை அதிகரிப்பதில் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ.) சிறப்பாக செயல்பட்டுள்ளது. இந்தியாவின் கடன் குறைவாக உள்ளது இது நல்ல அறிகுறி. தற்போது உலகம் முழுவதும் பணவீக்கம் உள்ளது. பணவீக்கத்தை குறைக்க உதவும் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி அதிகரித்து வருகிறது. பெரும்பாலான பணவீக்கம் உணவு மற்றும் எரிபொருளில் உள்ளது. உலகில் பணவீக்கம் குறைந்து வருவதை நாம் பார்க்க முடியும்,இந்தியாவிலும் குறையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பார்லே

காந்தார் இந்தியாவின் ஆண்டு பிராண்ட் புட்பிரிண்ட் அறிக்கையின்படி, தொடர்ந்து 10வது ஆண்டாக, உள்நாட்டு பிராண்ட் பார்லே, 2021ம்  ஆண்டில் இந்தியாவில் வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் தயாரிப்புகளில் மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிராண்ட் என்ற பெருமையை தொடர்ந்து 10வது ஆண்டாக உள்நாட்டு பிஸ்கட் பிராண்ட் பார்லே தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ள முதல் 10 பிராண்ட்களில் 7 உள்நாட்டு நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேகர் சர்மா

நிதி சேவை நிறுவனமான பேடிஎம் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகியுமான விஜய் சேகர் சர்மா (வயது 47) கடந்த  2012-22ம் நிதியாண்டில் மொத்த ஊதியமாக ரூ.4 கோடி பெற்றுள்ளார். விஜய் சேகர் சர்மா அண்மையில் பேட்டி ஒன்றில், எனக்கு 27 வயதாக இருந்தபோது நான் மாத சம்பளமாக  ரூ.10 ஆயிரம் வாங்கினேன். இதனை தெரிந்து பிறகு எனது வருங்கால மனைவியின் குடும்பத்தினர் எங்களை திரும்ப அழைக்கமாட்டார்கள். நான் என் குடும்பத்துக்கு தகுதியற்ற திருமணமாகாத இளைஞன் ஆகிவிட்டேன் என்று தெரிவித்தார்.

நிலக்கரி
முக்கிய 8 துறைகள் என்பது கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சிமெண்ட், நிலக்கரி, மின்சாரம், உருக்கு,  பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள் மற்றும் உரம் ஆகியவையாகும். 2022 ஜூன்  மாதத்தில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி 12.7 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. 2021 ஜூன்  மாதத்தில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி 9.4 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. 2022 மே மாதத்தில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி 18.1 சதவீதம் வளர்ச்சி கண்டு இருந்தது.