வர்த்தக துளிகள்.. 3 ஆண்டுகளுக்கு நிலக்கரி இறக்குமதியை அதிகரிக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்

 
நிலக்கரி விற்று ரூ.4,638 கோடி லாபம் பார்த்த கோல் இந்தியா

நாட்டின் பல பகுதிகளில் மின் வெட்டு நிலவுகிறது இதற்கு அனல் மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி இருப்பு குறைவாக இருப்பதும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு நிலக்கரி இறக்குமதியை அதிகரிக்குமாறு மாநிலங்களிடம் மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலக்கரி விலை அதிகமாக உள்ள நிலையில், மத்திய மின்சார துறை அமைச்சர் நிலக்கரி இறக்குமதியை அதிகரிக்க சொல்லியிருப்பது, நிலக்கரி விலை உயர்வுக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா,ஏர் இந்தியா

விமான சேவையில் ஈடுபட்டு வரும் ஏர் ஏசியா இந்தியா நிறுவனத்தில் டாடா சன்ஸ் 84 சதவீத பங்குகளை கொண்டுள்ளது. எஞ்சிய பங்குகளை மலேசியாவின் ஏர் ஏசியா கொண்டுள்ளது. இந்நிலையில் டாடா குழுமத்துக்கு சொந்தமான ஏா் இந்தியா, செயல்பாட்டு செலவுகளை குறைக்க பட்ஜெட் கேரியர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸூடன், ஏர் ஏசியா இந்தியாவை இணைக்கும் திட்டத்துடன், ஏர் ஏசியா இந்தியாவை கையகப்படுத்த உள்ளது. இந்த மும்மொழியப்பட்ட பரிவர்த்தனைக்கு போட்டி கண்காணிப்பாளர்களின் ஒப்புதலை பெறுவதற்காக ஏர் இந்தியா இந்திய போட்டி ஆணையத்தை அணுகியுள்ளதாக தகவல்.

ஐ-போன்

உற்பத்தியடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தின் இரண்டாம் ஆண்டான இந்த நிதியாண்டில், ஆப்பிள் ஒப்பந்த உற்பத்தியாளர்கள் இந்தியாவில் ரூ.47 ஆயிரம் கோடி மதிப்பிலான ஐபோன்களை தயாரிப்பாளர்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2021-22ம் நிதியாண்டில் ஆப்பிள் ஒப்பந்த உற்பத்தியாளர்களான பாக்ஸ்கான் மற்றும் விஸ்ட்ரான் ஆகிய நிறுவனங்கள் நம் நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான ஐபோன்களை தயாரித்து இருந்தன.

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி

நாடு முழுவதும் உள்ள அஞ்சல் நிலையங்களில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் சேவையை விரிவுப்படுத்துவதற்காக, இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக்கு கூடுதல் மூலதனமாக ரூ.820 கோடி அளிக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  தற்போது நம் நாட்டில் உள்ள 1.56 லட்சத்துக்கும் அதிகமான அஞ்சல் நிலையங்களில் 1.30 லட்சம் அஞ்சல் நிலையங்களில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் சேவைகள் அளிக்கப்பட்டு வருகிறது.