இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை எவை தாக்கத்தை ஏற்படுத்தும்?.. பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு

 
பங்கு வர்த்தகம்

கொரோனா பாதிப்பு, கச்சா எண்ணெய் விலை உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத் ஏற்படுத்தும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.

நம் நாட்டில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு சராசரி 13 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளது.  அதேசமயம் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி, போலந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கோ பேஷன் நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு இன்று (நவ.22) நிறைவடைய உள்ளது. லெண்ட் வியூ அனலிடிக்ஸ் நிறுவன பங்குகள் நாளை பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட உள்ளன.  டார்சன் புரோடக்ட்ஸ் நிறுவன பங்குகள் வரும் வெள்ளிக்கிழமையன்று பங்குச் சந்தைகளில் வர்ததகத்தை தொடங்குகிறது.  

கொரோனா வைரஸ்

அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்து வருவது அந்நாட்டில் மட்டுமல்ல சர்வதேச அளவில் பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் 80 டாலருக்கு கீழ் வந்துள்ளது. இது கச்சா எண்ணெய்  அதிகளவில் இறக்குமதி செய்யும் இந்தியாவுக்கு மிகவும் சாதகமானதாகும். 

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு

அமெரிக்கா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் தங்களது பொருளாதாரம் சார்ந்த முக்கிய புள்ளிவிவரங்களை வெளியிடுகின்றன. இதுதவிர இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் நிலைப்பாடு, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்கள் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தை நிர்ணயம் செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.