நிறுவனங்களின் நிதி முடிவு உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்டுத்தும்.. நிபுணர்கள் கணிப்பு

நிறுவனங்களின் நிதி முடிவு உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்டுத்தும்.. நிபுணர்கள் கணிப்பு

கொரோனா வைரஸ், நிறுவனங்களின் நிதி முடிவு உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.

வங்கி கடனை திரும்ப செலுத்துவதற்கான வழங்கப்பட்ட தவணை காலத்தில் கடனுக்கான வட்டியையும் தள்ளுபடி செய்ய உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இந்த வாரம் விசாரணைக்கு வருகிறது. இதனால் வங்கி துறையை சேர்ந்த பங்குகள் மீது முதலீட்டாளர்கள் அதிக கவனம் செலுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.ஆர்.சி.டி.சி., இன்போ எட்ஜ் இந்தியா, எவரெடி இண்டஸ்ட்ரீஸ் உள்பட சுமார் 350 நிறுவனங்கள் இந்த வாரம் தங்களது கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிடுகின்றன.

நிறுவனங்களின் நிதி முடிவு உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்டுத்தும்.. நிபுணர்கள் கணிப்பு
உச்ச நீதிமன்றம்

ஹேப்பிஸ்ட் மைண்ட்ஸ் மற்றும் ரூட் மொபைல் ஆகிய நிறுவனங்கள் இந்த வாரம் புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்குகின்றன. நம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 லட்சத்தை தாண்டி விட்டது. அதேசமயம் கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 77.36 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் உயிர் இழந்தவர்களின் விகிதமும் 1.72 சதவீதமாக குறைந்துள்ளது. ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய மற்றும் சீனா ஆகிய நாடுகளின் முக்கிய பொருளாதார புள்ளிவிவரங்கள் இந்த வாரம் வெளிவருகிறது.

நிறுவனங்களின் நிதி முடிவு உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்டுத்தும்.. நிபுணர்கள் கணிப்பு
பங்கு வர்த்தகம்

இதுதவிர இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் நிலைப்பாடு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு நிலவரம், சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை, சர்வதேச நிலவரங்கள் மற்றும் உள்நாட்டு நிலவரங்கள் இந்த வார பங்கு வர்த்கத்தின் ஏற்ற இறக்கத்தை நிர்ணயம் செய்யும் காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.