28ம் தேதி காலை 6 மணி முதல் பேருந்துகள் இயக்கம் – தமிழக அரசு

 

28ம் தேதி காலை 6 மணி முதல் பேருந்துகள் இயக்கம் – தமிழக அரசு

கொரனோ இரண்டாவது அலை கட்டுப்பாட்டு நடவடிக்கையாக கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் இரண்டு வாரங்களுக்கு தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியது. இதன் விளைவாக பாதிப்பு கட்டுக்குள் வந்த நிலையில் அடுத்தடுத்த வாரங்களில் படிப்படியாக தளர்வுகளை அளித்தது.

28ம் தேதி காலை 6 மணி முதல் பேருந்துகள் இயக்கம் – தமிழக அரசு

தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்கள் மூன்று பிரிவுகளாக வகைப் படுத்தப்பட்டு மூன்றாம் பிரிவில் இருந்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் பேருந்து சேவைக்கு கடந்த வாரம் அரசு அனுமதி வழங்கியது. இதை தொடர்ந்து, வரும் வாரத்திற்கான தளர்வுகளை அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், இரண்டாம் வகையில் உள்ள 23 மாவட்டங்களிலும் பேருந்துகளை இயக்க அனுமதி அளிப்பதாக அறிவித்தார்.

குளிர்சாதன வசதி இல்லாமல், 50% இருக்கைகளில் மட்டும் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும் என்றும் பிற 11 மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்தார். இந்த நிலையில், 27 மாவட்டங்களில் வரும் 28ஆம் தேதி காலை 6 மணி முதல் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள்ளும் மாவட்டங்களுக்கு இடையேயும் 50% இருக்கைகளுடன் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் பேருந்து சேவைக்கு அனுமதி தரப்பட்டதால் தொலைதூர பேருந்துகள் இயங்கும் என்றும் தெரிவித்துள்ளது.