தமிழகத்தில் 21 ஆம் தேதிக்கு பிறகு பேருந்து சேவை?

 

தமிழகத்தில் 21 ஆம் தேதிக்கு பிறகு பேருந்து சேவை?

தமிழகத்தில் பேருந்து சேவையை துவக்குவது குறித்து போக்குவரத்து துறை அமைச்சருடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் 21 ஆம் தேதிக்கு பிறகு பேருந்து சேவை?

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைய துவங்கி உள்ள நிலையில், பல்வேறு தளர்வுகளுடன் வரும் 21 ஆம் தேதி வரை தமிழக அரசு ஊரடங்கை நீட்டித்துள்ளது. தளர்வுகள் அறிவித்திருந்தாலும் முன்களப்பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுவதால் மற்ற பணிகளுக்கு செல்வோர் ஷேர் ஆட்டோக்கள் மற்றும் டாக்சிகளை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பேருந்து சேவையை துவக்க வேண்டும் என்று பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் வர துவங்கியுள்ளன.

இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்துள்ள மாவட்டங்களில் பேருந்து சேவையை துவக்குவது குறித்து முதலமைச்சருடன் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் செயலாளர் தயானந்த் கட்டாரியா ஆலோசனை நடத்தினர். முதலில் மாவட்டத்துக்குள் குறைந்த அளவில் பேருந்து சேவை துவங்கவுள்ளதகவும், 21 ஆம் தேதிக்கு பிறகு பேருந்து இயக்குவது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.