விளாத்திக்குளம் அருகே களைகட்டிய மாட்டுவண்டி எல்கை பந்தயம்!

 

விளாத்திக்குளம் அருகே களைகட்டிய மாட்டுவண்டி எல்கை பந்தயம்!

தூத்துக்குடி

விளாத்திக்குளம் அருகே கோவில் குமரெட்டியாபுரத்தில் நடைபெற்ற மாட்டுவண்டி எல்கை பந்தையத்தை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

விளாத்திக்குளம் அடுத்த கோவில் குமரெட்டியாபுரம் பாலசுப்ரமணிய சுவாமி மாசி திருவிழாவின் ஒரு பகுதியாக இன்று மாட்டுவண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது. சின்ன மாடு, பெரிய மாடு என 2 பிரிவுகளாக நடந்த போட்டியில் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 42 ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்றன.

போட்டி தொடங்கியதும், மாட்டுவண்டிகள் பந்தய தூரத்தை நோக்கி மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்து சென்றன. இதனை சாலையின் இருபுறமும் சூழந்து நின்ற, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

விளாத்திக்குளம் அருகே களைகட்டிய மாட்டுவண்டி எல்கை பந்தயம்!

சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட பெரியமாட்டு வண்டி போட்டியில் அவனியாபுரத்தை சேர்ந்த மாட்டு வண்டியும், 12 கிலோ மீட்டர் தூரமுடைய சிறிய மாட்டுவண்டி பந்தயத்தில் விளாத்திக்குளம் பூதலாபுரம் பகுதியை சேர்ந்த மாட்டுவண்டியும் முதலிடங்களை பிடித்தன.

இறுதியில் போட்டியில் வென்ற மாடுகளின் உரிமையாளர்கள் மற்றும் அதன் சாரதிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சுழற்கோப்பைகள் வழங்கப்பட்டது.